- எம்.அனஸ்-பொத்துவில், ஊடகவியலாளர் கரீம் ஏ.மிஸ்காத்
பொத்துவில்: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஆதரவுடன் ஊடகத்தின் குரல் சாய்ந்தமருது லக்ஸ்டோ மீடியா சிறிலங்கா நிறுவனம், இளைஞர் யுவதிகளுக்கான ஊடகச் செயலமர்வு ஒன்றை நடாத்தவுள்ளது.
ஆரோக்கியமிக்க ஊடகசமூகத்தை உருவாக்கும் சமூக நலவிசேட திட்டத்தின் கீழான இச்செயலமர்வில், வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் அறிவிப்பாளராக, தயாரிப்பாளராக பணியாற்றவிரும்பும் இளைஞர், யுவதிகள், பாடசாலை உயர்வகுப்பு, மற்றும் பல்கலைக்கழகமாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறமுடியும்.
பொத்துவில் அல்-இர்பான் மகளிர் கல்லூரியில் நவம்பர் 15ஆம் திகதியன்று காலை 8.30முதல் மாலை 3மணிவரை நடைபெறவுள்ள இச்செயலமர்வுக்கான அனுமதி இலவசம் என அறிவித்துள்ள நிறுவனத்தின் தலைவர் மருதூர் ஏ.எல்.அன்ஸார், பதிவுகளுக்கு 077 9322797 மற்றும் 077 5509039 என்ற இலக்கங்களோடு தொடர்புகொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
Leave a comment