கொழும்பு: இலங்கை அரசாங்கத்திற்கு இஸ்ரேலுடன் நட்புறவை பேனும் என்னங்களோ அல்லது அவர்களுடன் இராஜதந்திர உறவுகளை பேனும் நிலைபாடோ கிடையாது என பாராளுமன்ற தவிசாளர் குழு உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐ.தே.க. பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார்.
இலங்கை – இஸ்ரேல் நாடனும் யூத சியோனிஸ்ட்களுடனும் நட்புறவை வளர்த்து வருவதாக சுமத்துப்பட்டுவரும் குற்றசாட்டுகள் தொடர்பில் வெ ளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி. சில்வா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன ஆகியோரை முஜிபுர் ரஹ்மான் அலரி மாளிகையில் சந்தித்த கலந்துரையாடினார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, அரசியல் அநாதைகளாக்கப்பட்டவர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பின்னாலிருந்து செயற்படக்கூடிய சிலரே தவறான தகவல்களை வெளியிடுகின்றனர் அன்றும் அவர் குற்றம் சுமத்தினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் அமெரிக்க யூத சங்கத்தினர் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். அது இராஜதந்திர விஜயமல்ல. எனினும் அவர்கள் இந்நாட்டுக்கு வந்தபோது இலங்கையின் வெ ளிவிவகார அமைச்சர் ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி. சில்வாவை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இவர்களுடனான சந்திப்பானது சாதாரன சந்திப்பாகும். அத்துடன் யூத அமைப்புகளுடனோ அல்லது இஸ்ரேலுடனோ இல்லாவிடின் சியோனிஸ்ட்களுடனோ எவ்வதமான உடன்படிக்கைகளை நாம் கைச்சாத்திட வில்லை என்று பிரதி வெ ளிவிவகார அமைச்சர் என்னிடம் தெரிவித்தார்.
இலங்கை இஸ்ரேல் நட்புறவு சங்கமொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறித்து அமெரிக்க யூத அமைப்பின் இணையத்தளத்தில் செய்தி வெ ளியிட்டிருக்கின்றமை தொடர்பாக பிரதி வெ ளிவிவகார அமைச்சரிடம் நான் கேள்வி எழுப்பினேன். மட்டுமன்றி இதனால் இலங்கை முஸ்லிம்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் அவரிடம் தெரிவித்தேன. எனினும் குறித்த நட்புரவு சங்கம் அமைக்கப்பட்டிருந்த செய்தியை ஹர்ச டி. சில்வா முற்றாக மறுத்தார் .
இதேவேளை, சீனாவுக்கான பயணத்தை நிறைவு செய்தபின் நாடு திரும்பிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவும் குறித்த நட்புறவு சங்கம் தொடர்பான செய்தியை மறுத்தார். அத்துடன் நாட்டுக்கு வந்த அவர்கள் எம்மை சந்தித்து புதிய அரசியல் மாற்றத்திற்கு பின்னரான நாட்டு நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
தற்போதைய நாட்டு நிலைமைகள் தொடர்பிலும் வடக்கின் நிலைவரம் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பிலும் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அமைச்சர்கள் தெரிவித்தனர் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமே இஸ்ரேலுடனான உறவை புதிப்பித்தது. அத்துடன் அவர் மற்றும் அவருடனான குழுவொன்று இஸ்ரேலுக்கு சென்று அந்நாட்டுடனான இராஜதந்திர நடவடிக்கைகளை புதுப்பித்தது. இதற்கப்பால் இலங்கையில் இஸ்ரேலுக்கான தூதரகமொன்றை நிறுவும் முயற்சியையும் மஹிந்த அரசாங்கமே முன்னெடுத்தது. இதன்போது எதிர்க்கட்சியில் ஒரு மாகாண சபை உறுப்பினராக இருந்துகொண்டு அதனை நான் எதிர்த்து வந்தேன். கொழும்பில் பல ஆர்ப்பாட்டங்களை செய்தே அந்த நடவடிக்கையை தடுத்தேன்.
இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில் அவ்வாறானதொரு திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என மஹிந்த ராஜபக்ஷவும் அவருக்கு பின்னால் ஒழிந்துகொண்டிருப்பவர்களும் சில பொய் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். இந்த வங்குரோத்து அரசியல் வாதிகள் மஹிந்த அரசாங்கத்தின்போது அவர் இலங்கை முஸ்லிம்களுக்கு இடம்பெற்ற அநியாயங்களின்போதும் வாய்திறக்கவில்லை. இப்போது பொய் பிரச்சாரங்களையே முன்னெடுக்கின்றனர்.
இந்நிலையில் ஐ.தே.க. அமைச்சர்களை அமெரிக்க யூத சங்கத்தினர் சந்தித்தமையினால் அவர்களை நேரடியாக சந்தித்து விளக்கம் கேட்டதோடு இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளித்தேன்.
எந்த காரணத்தை கொண்டும் நல்லாட்சி அரசாங்கம் இஸ்ரேலுடனான எவ்விதமான இராஜதந்திர தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளாது. அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை என்றார்.
Published by
![SL_Israel[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/sl_israel1.jpg?w=80&h=80)
Leave a comment