இளைஞர் பாராளுமன்றத் தேர்தல்: மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள்

 – பழுலுல்லாஹ் பர்ஹான்

yourth election 2015மட்டக்களப்பு: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் 334 பிரதேச செயலகங்களில்  (07 ) சனிக்கிழமை இடம்பெற்று முடிந்த மூன்றாவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைமையக பணிமனையின் உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என். நைரூஸ் தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்புத் தொகுதியில் 1564 விருப்பு வாக்குகளை பெற்று எட்வட் ஜெயராசா பயஸ்ராஜூம் கல்குடாத் தொகுதியில் 2304 விருப்பு வாக்குகளை பெற்று குழந்தை ஜெபகுமாரும் பட்டிருப்புத் தொகுதியில் 431 விருப்பு வாக்குகளை பெற்று பிறைசூடி வதீஸ்குமாரும் இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளாதவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 18607 இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் 8579 வாக்குகள் மாத்திரம் அளிக்கப்பட்டதாவும் அதில் 55 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும் உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைரூஸ் மேலும் தெரிவித்தார்.

yourth election 2015

Published by

Leave a comment