கல்முனை மண்ணுக்கு மீண்டும் கௌரவம், மு.காவின் பிரதித் தலைவராக பிரதி அமைச்சர் ஹரீஸ் நியமனம்

  • ஹாசிப் யாஸீன்

harees harisகல்முனை: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராக விளையாட்டுத் துறை பிரதி
அமைச்சர் எச்.எச்.எம்.ஹரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை, கட்சியின் தலைவர் ரவூப்
ஹக்கீம், இன்று கண்டி, பொல்கொல்லையில் நடைபெற்ற 26து பேராளர் மாநாட்டில்
அறிவித்தார்.

இந்நியமனத்திற்கான அனுமதி நேற்றிரவு கண்டியில் இடம்பெற்ற கட்சியின்
கட்டாய அதியுயர்பீட கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை மு.காவின் சிரேஷ்ட பிரதித் தலைவராக கல்முனை பிரதி மேயர் முழக்கம்
மஜீத், பிரதித் தலைவர்களாக ஹாபீஸ் நசீர், ரவூத்தார் நெய்னா முஹம்மத்
மற்றும் யூ.டி.எம்.அன்வர் ஆகியோர் செயற்படுகின்றர்.

இந்நிலையில் கட்சியின் யாப்பில் மற்றுமொரு பிரதித் தலைவர் பதவி
உருவாக்கப்பட்டு அந்த இடத்திற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்
சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராக விளையாட்டுத் துறை பிரதி
அமைச்சர் எச்.எச்.எம்.ஹரீஸ் நியமிக்கப்பட்டதையிட்டு அம்பாறை மாவட்ட
கட்சியின் போராளிகள், ஆதரவாளர்கள், கட்சியின் மாவட்ட உயர்பீட
உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும், கட்சியின்
உயர்பீட உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளதுடன் பிரதி அமைச்சர்
ஹரீஸூக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Published by

Leave a comment