- ஹாசிப் யாஸீன்
கொழும்பு: இலங்கை மற்றும் மேற்கிந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் பகல் இரவு போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று (04) புதன்கிழமை ஆர்.பிரரேமதாஸா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன்போது இரு அணிகளுக்கிடைலான அறிமுக நிகழ்வில் அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் உள்ளிட்ட சர்வதேச மற்றும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.



Leave a comment