புத்தளம் பாத்திமா மகளிர் கல்லுாரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

puttalam fathimaபுத்தளம்: புத்தளம் பாத்திமா மகளிர் கல்லுாரியின் வருடாந்த பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை (06.11.2015) பிற்பகல் 2.30 மணிக்கும் பாடசாலையில் இடம் பெறவுள்ளது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் கலந்து கொள்வதுடன், கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர்.எம்.எச்.எம். நவவி விசேட அதிதிகளாக வடமேல் மாகாண சபை உறுப்பினர், என்.ரீ.தாஹிர், எஸ்.எச்.எம்.நியாஸ்,

முன்னாள் பிரதி அமைச்சரும்,ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான அசோக வடிகமங்காவ,முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஹ்யா ஆப்தீன்,ஏ.எச்.எம்.நியாஸ், புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவர்.கே.ஏ.பாயிஸ், ஜக்கிய தேசிய கட்சியின் கற்பிட்டி பிரதேச அமைப்பாளர் எம்.என்.எம்.நஸ்மி, தொழிலதிபர் அலி ஷப்ரி, புத்தளம் பிரதேச செயலாளர்.எம்.ஆர்.எம். மலீக் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

puttalam fathima

Published by

Leave a comment