காத்தான்குடி நகரசபைக்கு எதிரான கணவ ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Protest ucகாத்தான்குடி: காத்தான்குடி நகரசபைக்கு உட்பட்ட ஏ.எல்.எஸ்.எல் மாவத்தையில் உள்ள குப்பைகளை நகரசபை ஊழியர்கள் அகற்ற மறுத்து தொடர்ச்சியாக புறக்கணித்து வருவதைக்கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த இக்பால் என்பவருடன் அப்பகுதி மக்கள் சிலரும் காத்தான்குடி நகரசபைக்கு எதிராக இன்றுக்காலை அப்பகுதியின் பிரதான சந்தியான அலியார் சந்தியில் கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர் .

கடந்த சில நாட்களுக்கு முன் அப்பகுதி பெண் ஒருவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்காலம் மழை காலம் என்பதால் குப்பைகள் தேங்கி டெங்கு போன்ற பாரிய நோய்கள் பரவக்கூடிய வாய்ப்புள்ளது என அப்பகுதி மக்கள் அச்சம் தெறிவிக்கின்றனர்..

Protest uc

எனவே உரிய அதிகாரிகள் இவ் விடயத்தை கவனத்திற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இக்பால் உற்பட அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்..

  • ஜுனைட்.எம்.பஹ்த்

Published by

Leave a comment