காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலை ஓங்கி உயர்ந்த நவீன கட்டிடமாக காணப்பட்ட போதிலும் ஆளணிப்பற்றாக்குறையுடனும் வளப்பற்றாக்குறையுடனும் இயங்கி வருகின்து. இதனால் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு செல்லும் பொதுமக்கள் பலதரப்பட்ட அசௌகரியங்களுக்குள்ளாகின்றனர்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கிழக்கு மாகாணத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகளில் ஒன்றாக காணப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் 16 ஆதார வைத்தியசாலைகள் உள்ளன. இவற்றில் கிழக்கு மாகாண சுகாதா அமைச்சின் கீழ் 12 ஆதார வைத்தியசாலைகளும், மத்திய சுகாதார அமைச்சின் கீழ் 4 ஆதார வைத்தியசாலைகளும் உள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 ஆதார வைத்தியசாலைகள் உள்ளன. காத்தான்குடி மற்றும் ஏறாவூர் களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை ஆகிய வைத்தியசாலைகளேயாகும்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள 3 ஆதார வைத்திய சாலைகளும் திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் ஆதார வைத்தியசாலையுமாக நான்கு ஆதார வைத்தியசாலைகளை மத்திய அரசிலுள்ள சுகாதார அமைச்சு பராமரித்து வருகின்றது.
கிழக்கு மாகாணத்திலுள்ள ஏனைய 12 ஆதார வைத்தியசாலைகள் கிழக்கு மாகாண சபையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
காத்தான்குடியிலுள்ள இந்த வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக இருந்த போது 2009ம் ஆண்டு கிழக்கு மாகாண சபையின் அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த இன்றைய மீள் குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எடுத்துக் கொண்ட முயற்சியினால் மத்திய அரசின் அமைச்சரவை அங்கீகாரத்துடன் ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டது.

இந்த வைத்தியசாலை 2009ம் ஆண்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட போதிலும் ஆதார வைத்தியசாலைக்குரிய வளங்கள் மற்றும் ஆளணிகள் எதுவும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இது வரை வழங்கப்படவில்லை
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டதையடுத்து இந்த வைத்தியசாலையை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிருவாகத்திலிருந்து மத்திய அரசின் சுகாதார அமைச்சுக்கு மாற்றுவதற்காக பல முயற்சிகளை கிழக்கு மாகாண சபையின் அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த இன்றைய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எடுத்த போதிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.
இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கேட்ட போது 2010ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் அன்றைய அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக இருந்த நிமால் சிறிபாலடி சில்வாவை வைத்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்காக பலதரப்பட்ட முயற்சிகளை மேற் கொண்டேன்.
அதற்காக அன்றைய கிழக்கு மாகாண சபையின் ஆளுனர், மற்றும் அன்றைய முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரின் சம்மதத்தையும் பெற்று மத்திய அரசின் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்காக முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டபோது சுகாதார அமைச்சு நிமால் சிறிபாலடி சில்வாவிடமிருந்து மாற்றப்பட்டது. பின்னர் அந்த முயற்சி கைகூட வில்லை என்றார்.
அதனால் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை இன்று வரை ஆளணிப்பற்றாக்குறையுடனேயே கிழக்கு மாகாண சபையின் கீழே இயங்கி வருகின்றது.
2004 டிசம்பர் 26ல் ஏற்பட்ட சுனாமி அனாத்தத்தினால் இந்த வைத்தியசாலை முழுமையாக சேதமடைந்தது.
பின்னர் நோர்வே நாட்டு செஞ்சிலுசை;சங்கம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடனும் சுகாதார அமைச்சின் அணுசரணையுடனும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்காக புதிய கட்டிடத்தை நிர்மாணித்து 2010ம் ஆண்டு வழங்கியது.
இந்தக் கட்டிடம் சுமார் 580 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டது இதில் 480 மில்லியன் ரூபாவுக்கு கட்டிடமும், 100 மில்லியன் ரூபாவுக்கான வைத்தியசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டதாக தெரியவருகின்றது.
இதற்கான புதிய கட்டிடத்தை நிர்மானிப்பதில் அப்போதைய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த இன்றைய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சி மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் அதன்; காத்தான்குடி கிளை நிருவாகிகள் மற்றும் அன்று இந்த வைத்தியசாலையின் வைத்திய
அதிகாரியாக இருந்து இன்று காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியாக இருக்கும் டாக்டர் யு.எல்.நசிர்தீன் அதே போன்று காத்தான்குடி வைத்தியசாலையின் அன்று மாவட்ட வைத்திய அதிகாரியாக இருந்த டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் போன்றோரின் முயற்சிகள் நினைவு கூறப்பட வேண்டியதாகும். இவர்களின் இந்த முயற்சியினால் இன்று இந்த வைத்தியசாலையின் கட்டிடம் ஓங்கி உயர்ந்து காணப்படுகின்றது.
இருந்த போதிலும் பல் வேறு குறைபாடுகளும் ஆளணிப் பற்றாக்குறையும் இங்கு காணப்படுகின்றன.
ஒரு ஆதார வைத்தியசாலைக்கு வழங்க வேண்டிய ஆளணி மற்றும் வளங்கள் கிழக்கு மாகாண சுகாதர திணைக்களத்தினால் காத்தான்குடி ஆதார வைத்திய சாலைக்கு வழங்கப்படவில்லை என்பதே இங்கு காணப்படும் மிகப் பெரிய குறைபாடாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி 300ஆக இருக்க வேண்டிய நிலையில் தற்போது 210ஆக ஆளணி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆளணி கூட இங்கில்லை. தற்போது இங்கு 210 ஆளணி இருக்க வேண்டிய இந்த வைத்தியசாலையில் 126 பேரே கடமைபுரிகின்றனர்.
35 வைத்தியர்கள் தேவை ஆனால் 18 வைத்தியர்களே கடமை புரிகின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதே போன்று பொதுச் சுகாதார மருத்துவ மாது (மிட்வைப்) 8 பேர் தேவையான இந்த வைத்தியசாலையில் 2 பேரே உள்ளனர். அத் தோடு மகப்பேற்று வைத்திய அதிகாரி அல்லது மகப்பேற்று சத்திரசிகிச்சை நிபுனர் மற்றும் இரத்த வங்கி போன்றவைகள் இல்லாததால் குழந்தை பிரசவ அறை அதன் விடுதி என்பன இயங்காமலுள்ளது. குழந்தை பிரசவ அறை மற்றும் சத்திர சிகிச்சைக் கூடம் அமைக்கப்பட்டுள்ள போதிலும் மயக்க மருந்து வழங்கும் வைத்தியர் அதற்கான உபகரணங்கள் இங்கில்லாததால் அது இயங்கமாலுள்ளது. இதனால் இந்த வைத்தியசாலையில் குழந்தை பிரசவம் இடம் பெறுவதே இல்லை. இந்த வைத்தியசாலைக்கு தப்பித்தவறி யாராவது கர்ப்பிணித்தாய் சென்று விட்டால் அதே வேகத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு உடனேயே மாற்றப்படுகின்றனர்.
அதே நேரம் காத்தான்குடிக்கு அருகிலுள்ள மத்திய மருந்தகமொன்றில் பொதுச் சுகாதார மருத்துவ மாது (மிட்வைப்) 4 பேர் உள்ளார்கள் என்பதும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இங்கு பொதுச் சுகாதார மருத்துவ மாது (மிட்வைப்) 8 பேர் தேவையான நிலையில் 2 பேரே உள்ளனர்
இங்கு மருத்துவ ஆய்வு கூடம் இருந்த போதிலும் உபகரணங்கள் அதற்கான உத்தியோகத்தர்கள் இல்லை.அத்தோடு இரத்தம் பரிசோதனை செய்யும் ஆய்வு கூட உத்தியோகத்தரில்லை ளஉயn ரnவைக்கானஆளணி வெற்றிடம் உள்ளதுடன் அதற்கான வைத்தியருமில்லை.
ஈசி ஜி எடுப்பதற்கான உத்தியோகத்தர் இங்கு இல்லாத நிலையில் மாவட்டத்திலுள்ள ஏனைய ஆதார வைத்தியசாலைகளுக்கு இவ் உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. அது போன்று எக்ஸ்றே எடுப்பதற்கான உத்தியோகத்தர் இருவர் தேவையான நிலையில் ஒருவர் மாத்திரமே உண்டு. அத்தோடு இந்த வைத்தியசாலையில் நான்கு பாமசிஸ்ட் எனப்படும் மருந்து விநியோகம் செய்பவர் தேவை ஆனால் இங்கு ஒரு பாமசிஸ்ட்டே கடமையாற்றுகின்றார். மிகவும் சிரமத்துடனேயே இவர் இங்கு கடமையாற்றுகின்றார்.
சுமார் 13000 குடும்பங்கள் வாழும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இந்த ஆதார வைத்தியசாலைக்கு காத்தான்குடி மற்றும் புதிய காத்தான்குடி பாலமுனை, கர்பலா, பூநொச்சிமுனை மஞ்சந்தொடுவாய் என காத்தான்குடியைச் சுற்றியுள்ள பல கிராம மக்கள் வருகின்றனர்.
இங்கு நாளார்ந்தம் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சராசரியாக 400க்கும் 500க்குமிடையில் பொது மக்கள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். அதே போன்று சராசரியாக நாளர்ந்தம் 50 பேர் விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறான சூழ் நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி என்பதும் வளப்பங்கீடு என்பதும் முக்கியமாகும்.
இந்த நிலையில் தற்போது இந்த வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வரும் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீரிடம் கேட்ட போது ஆளணிப்பற்றாக்குறையை சுட்டிக்காட்டுவதுடன் இந்த வைத்திய சாலையின் புதிய கட்டிடம் நிர்மானிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் வைத்தியசாலைக் கட்டிடத்தின் சில பகுதி பழுதடைந்துள்ளதால் மழை காலங்களில் ஒழுக்கு ஏற்பட்டு மழை நீர் வைத்தியசாலைக்குள் ஓடி வருகின்றது.
இந்தக்கட்டிடத்தின் சில பகுதிகள் உடைந்து காணப்படுவதுடன் கட்டிடத்தின் சில இடங்களில் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பல சிரமங்களை வைத்தியசாலை நிர்வாக எதிர் நோக்கவேண்டியதுள்ளது.
இதே நேரம் இந்த வைத்தியசாலைக்கட்டிடம் நிர்மானிக்கப்பட்டு வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டமைக்கான எந்தவொரு தகவலும் வைத்தியசாலையில் காணப்படவில்லை.
இது தொடர்பாக பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன் மாகாண சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் அறிவிக்கவுள்ளதாகவும் டாக்டர் ஜாபீர் குறிப்பிட்டார்
அத்தோடு வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் உதவியுடனும் ஆலோசனையுடனும் தனது முயற்சியினாலும் தனி நபர் ஒருவரின் நிதியுதவியுடன் உள நல சிகிச்சைப்பிரிவுக்கான கட்டடம் நிர்மானிக்கப்பட்;டுள்ளது. ஆனால் இதற்கான குறைவேலைகள் நிலவுவதாகவும் இதற்காக 3 லட்சம் வரை செலவு செய்து இக்கட்டடத்தினை அவசரமாக திறக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
அத்தோடு மிகஅவசரமாக 300, பெட்சீட்கள்;- நோயாளிகளுக்கான 150 கட்டில்கள் தேவைப்படுவதுடன் ஒரு விடுதி ஒன்றுக்கு பகுதியான புனரமைப்பு வேலை செய்து அந்த விடுதியையும் நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறக் கூடியதாக மாற்ற வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் இங்கு அரடவல அநனயை ளலளவநஅஇ ளழரனெ ளலளவநஅஇசநகசைபைநசயவழசஇ யசை உழனெவைழைn வசதி தேவை யுள்ளது எனவும் குறிப்படுகின்றார்.
தான் வைத்திய அத்தியட்சகராக கடமையேற்று வைத்தியசாலை அபிவிருத்திகுழுவின் உதவியுடன் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் தற்போதய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வினாலும் இவ்வைத்திசாலைக்கு பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதே போன்று காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையமும் இன்னும் ஒரு சில தனி நபர்களும் சில உதவிகளை செய்துள்ளதாகவும் டாக்டர் ஜாபீர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் நலன் விரும்பிகள் புத்திஜீவிகள் உதவ முன் வரவேண்டும்.
அத்துடன் இந்த வைத்தியசாலையின் ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதுடன் இதற்கான வளத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டியது கிழக்கு மாகாண முதலமைச்சர் கிழக்கு மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு சுகாதார திணைக்களம் என்பவற்றின் பொறுப்பாகும்.
நல்லாட்சி அரசாங்கத்தில் புறக்கனிப்புக்கள் இடம் பெறாது என சுட்டிக்காட்டப்படும் நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கான
ஆளணி மற்றும் வளம் என்பதும் கிடைக்க வேண்டுமென்பது மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.
இது விடயத்தில் அனைவரும் கவனமெடுக்க வேண்டு மெனவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a comment