- MJ
மழை வந்தால்
வெள்ளம் வரும்
தவளை கத்தும்
புற்புதர்களுக்குள்ளும்
வடிகாண்களுக்குள்ளும்
பாம்புகள் ஒழிந்துகொள்ளும்
அடுத்தவன்
வெற்றுக்காணியிலும்,
வீட்டுவாசல் முன்னாலும்
வீசிய குப்பைகள்
அழுகி நாற்றமெடுக்கும்
நோய் தொற்று ஈக்களும்
டெங்கு நுளம்புகளும்
மஞ்சல் காய்ச்சலும்
ஊரை ஆக்கிரமிக்கும்
ட்ரெய்ணேஜ் நிறைந்து
குந்தவும் முடியாமல்
குடியிருக்கவும் முடியாமல்
மேட்டுநில வீடுகளுக்குள்
தஞ்சமடைதல்
மழையைத் திட்டுது
ஒரு கூட்டம்
அரசியல்வாதிகளைச் சபிக்குது
மற்றொரு கூட்டம்
மழைக்கால பஞ்சம்
பட்டிணி, வறுமை
வழமைபோல்
வாட்டுகிறது
காத்தான்குடியில்
தேர்தலென்றால்
சோற்றுப்பார்சல்களுடன்
ஊடகவியலாளர்களுடன்
படையெடுக்கும் அரசியல்வாதிகளை
இன்றைய மழைக்கு காணவில்லை!

Leave a reply to NM. Abdul Careem Cancel reply