- MJ
லண்டன்: 2003ம் ஆண்டு அமெரிக்க கூட்டுப்படையுடன் ஓர் பிரதான நாடாக இணைந்து அமைதியாக இருந்த ஈராக்கின் மீது, அணுஆயுத குற்றச்சாட்டைச் சுமத்தி, மேற்கொள்ளப்பட்ட ஈராக் யுத்தத்தில் பிரித்தானிய இராணுவம் முக்கிய பங்காற்றியது. அவ்வேளையில் பிரித்தானியாவின் பிரதமராக இருந்தவர் டோனி பிளேய்ர்.
அவரது பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் இங்கிலாந்தில் வெளிநாட்டினர் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான பல வழிகளைச் செய்தவர். துவேசமில்லாத, அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஓர் சிறந்த பிரதமராக டோனி பிளேய்ர் இருந்ததுடன் அவரது ஆட்சியும் அவ்வாறே இருந்தது.
எனினும், அமெரிக்காவின் நட்புக்காகவும், அணு ஆயுதத்தை ஈராக் உற்பத்தி செய்வது மேற்குலகிற்கான அபாயம் என்பதையும் வலியுறித்திய அமெரிக்காவின் தந்திரத்தில், பிரித்தானியா தனது தலையைக் கொடுத்தது.

2003 காலப்பகுதியில் ஈடுபட்ட மேற்கத்தேய புலனாய்வின் பிழையான அறிக்கைகளும், தவறான தகவல்களுமே ஈராக் மீது யுத்தம் மேற்கொள்ள தன்னை வலியுத்தியதாகவும், இந்த யுத்தம் அணு ஆயுதத்தை கைப்பற்ற முடியவில்லை எனவும் மனம் வருந்தியிருக்கிறார் பிளேய்ர்.
2003 ஈராக் யுத்தத்தின் பின்னரே வளைகுடா பிரதேசங்களில் பல ஆயுதக் குழுக்கள் தோற்றம் பெற்றதாகவும், இக்குழுக்களில் பிரதானமான ஓர் பயங்கரவாதக் குழுவான ஐ.எஸ். உருவாகுவதற்கு ஈராக் யுத்தமே பிரதான காரணம் எனவும் டோனி பிளேய்ர் மனம் திறந்திருக்கிறார்.
டோனி பிளேய்ரின் இந்த மன்னிப்புக் கோரலானது உலகத்தின் கவனத்தைத் தற்போது ஈர்த்துள்ளது.MJ
Leave a comment