- முஹம்மட் ரிபாக்
முல்லைத்தீவு: தண்ணிரூற்றுமுஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அமுதவிழா நடத்துவது மற்றும் அபிவிருத்தி உட்பட பல விடயங்கள் தொடர்பிலான விஷேட கலந்துரையாடலொன்று எதிர்வரும் 31ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக அதிபர் ஏ.சி.ரியாஸ் தெரிவித்தார்.
புhடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் என்பன இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பில் பாடசாலையின் அதிபர் மேலும் குறிப்பிடுகையில்,
குறித்த பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 80 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு அமுதவிழா நடத்துவது தொடர்பாகவும், பாடசாலையின் வரலாறு தொகுப்பது உள்ளிட்ட அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட வேண்டியுள்ளது.
எனவே, குறித்த கலந்துரையாடலில் முல்லைத்தீவில் மாத்திரமின்றி, வெளியிடங்களில் வாழும் தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களும், கற்பித்துக் கொடுத்த ஆசிரியர்கள், நலன் விரும்பிகளும் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்க வேண்டும் என திறந்த அழைப்பை விடுப்பதாகவும் அதிபர் ஏ.சி.ரியாஸ் மேலும் தெரிவித்தார்.
Leave a comment