மத்திய மாகாண சபை ஐ. தே. க. உறுப்பினர் ஹேரத் கைது

arrestதம்புள்ள: மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான திஸ்ஸ பண்டார ஹேரத் நேற்று (25) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் நபரொருவரைத் தாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப் பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

கடந்த புதன்கிழமை 21ம்திகதி தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய பகுதியில் இடம்பெற்ற சம்பவமொன்றின்போதே குறித்த நபரை மத்திய மாகாண சபை உறுப்பினர் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபர் பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்தே மேற்படி மாகாண சபை உறுப்பினர் நேற்று கைதாகியுள்ளார். இது தொடர்பான மேல திக விசாரணைகள் தம்புள்ளை பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்றன.

Published by

Leave a comment