மட்டக்களப்பில் இரண்டு இந்துக் கோவில்கள் மீது தாக்குதல்

templeமட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில்  வெள்ளிக்கிழமை (23) இரவு இரண்டு இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சிலைகளும் உடமைகளும் வீதியில் வீசப்பட்டுள்ளன. குருக்கள்மடம் கிருஷ்ணன் கோவில், மட்டக்களப்பு – பொலநறுவை நெடுஞ்சாலையிலுள்ள வாகனேரி இத்தியடி வழிப் பிள்ளையார் ஆலயம் ஆகிய இரண்டு கோயில்களின் மீதே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

வாகனேரி இத்தியடி வழிப் பிள்ளையார் ஆலயம் சில மாதங்களுக்கு முன்னரும் இதுபோன்ற தாக்குதலுக்கு உள்ளானதாக உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குருக்கள்மடம் கிருஸ்ணன் கோவில் மீது தாக்குதல் நடத்திய நபர்களினால் அங்கிருந்த நவக்கிரகங்கள் உட்பட 13 விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டு வீதியில் வீசப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பாக ஆலய நிர்வாகங்களினால் காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

temple

மோப்ப நாய்களின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ள போதிலும் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்படுகின்றது. குறித்த ஆலயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

தாக்குதலுக்கான காரணங்கள் தெரியவில்லை. பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by

Leave a comment