‘தாபிந்து முத்து’ முத்தான வியர்வை வர்த்தக கண்காட்சியும் மலிவு விற்பனையும் மட்டக்களப்பில்

  • எம்.எச்.எம். அன்வர்

exibition1மட்டக்களப்பு: திவினெகும திணைக்களத்தின் அணுசரணையில் “தாபிந்து முத்து”- “முத்தான வியர்வை” வர்த்தக கண்காட்சியும் மலிவு விற்பனையும் மட்டக்களப்பில் நாவற்குடா விளையாட்டு மைதானத்தில் இன்று (24.10.2015) இடம்பெற்றது. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் திவினெகும உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்ட கைப்பணிப் பொருட்கள் இனிப்பு பண்டங்கள் மிக்ஷர் வகைகள் பாய் பெட்டி வகைகள் மரக்கன்று வகைகள் சட்டி பானைகள் நெசவு சாரண் பெட்சீட் வகைகள் பூ வேலைப் பொருட்கள் என்பன காட்சிக்கு வைக்கப்பட்டதுடன் விற்பனையும் செய்யப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும பணிப்பாளர் பி குணரெட்ணம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் பி எஸ் எம் சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்கண்காட்சியினை திறந்து வைத்தார்.

exibition1

மேற்படி நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர் மாவட்ட கணக்காளர் பிரதேச செயலாளர்கள் திவிநெகும முகாமையாளர்கள் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திவிநெகும பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.

exibition

Published by

Leave a comment