வருடாந்த ஊடகவியலாளர் சந்திப்பு

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

journalistsமட்டக்களப்பு: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை ஏற்பாடு செய்த 2015ம் ஆண்டுக்கான வருடாந்த ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைமையக பணிமனையின் உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைரூஸ் தலைமையில் தலைமையில் இடம்பெற்ற இவ் ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்முஸ்லிம் அச்சு இலத்திரணியல் ஊடகவியலாளர்கள் ,மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி.கலாராணி,திருமதி நிசாந்தினி உட்பட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனையின் தலைமையக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

journalists

இதன் போது ஊடகவியலாளர்களுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் தொடர்பாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படவுள்ள நிகழ்வுகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்ட்டது.

இங்கு ஊடகவியலாளர்களினால் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை தலைமையக அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்களும் அளிக்கப்பட்டதோடு இவ் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் ரீசேர்ட் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்ட்டமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment