ஆஷூரா நோன்பின் சிறப்புகள்

  • மெளலவி. அல்ஹாஜ். மஸ்ஊத் அஹ்மத்-ஹாஷிமி

aasoora📎இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும்ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.

📕நூல்: புகாரி 2006

📎நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

📗நூல்: முஸ்லிம் 1976

aasoora

📎நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

📘நூல்: முஸ்லிம் 1977

*இன்ஷா அல்லாஹ் தாஸூஆ (முஹர்ரம் ஒன்பதாம் நாள்), ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாள்) நோன்பு நோற்பதற்கு உறுதி கொள்வோம்.

23.10.2015 வெள்ளிக்கிழமை

24.10.2015 சனிக்கிழமை

Published by

Leave a comment