- அபிவிருத்திக் குழு செயலாளர் UL. முஹைதீன் பாவா (JP)
ஏறாவூர்: ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு கடந்த இரு வருடங்களுக்கு முன்பு 24 பேர் கொண்ட “வைத்தியசாலை அபிவிருத்தி குழுவை” அப்போதைய மாகாண விவசாய அமைச்சராக இருந்த ஹாபீஸ் நசீர் அஹமத் நியமனம் செய்தார்.
அக்குழு திறமையாக இயங்காத விடயத்தை தற்போது முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் ஹாபீஸ் நசீர் அஹமத், ஏறாவூர் வைத்தியசாலைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டபோது தெரிவிக்கப்பட்டதால் ,கடந்த 07.10.2015 திகதி இடப்பட்ட EP/04/EJ/௦I/OIஎன்ற மாகாண சுகாதார அமைச்சின் கடிதத்த லைப்பிநூடாக புதிய அபிவிருத்தி குழு நியமனம் செய்யப்பட்டது .
இதற்கு அமைவாக 16.10.2015 அன்று புதிய நிர்வாக குழு கூடி தலைவராக வைத்திய அத்தியட்சகர் DR.MHM. தாரிக் ,செயலாளராக ஜனாப் .UL. முகைதீன் பாவா (JP), பொருளாளராக ஓய்வு பெற்றஆசிரியர் அல்ஹாஜ் ZA. ஹிதாயத்துல்லாஹ் ஆகியோர் தெரிவானதை அடுத்து வைத்திய சாலையின் தேவைகள் ,குறைபாடுகள் தொடர்பாக DR.தாரிக் அவர்களால் விரிவாக எடுத்து கூறப்பட்டு ஆராயப்பட்டது .
இறுதியில் இவ்விடயத்தை கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹ்மத் ,பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா ,மத்திய அமைச்சின் சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோருடன் தொடர்பு கொண்டு அபிவிருத்திக்கான உதவிகளை கோருவதென தீர்மானிக்கப்பட்டது .
இத் தீர்மானத்துக்கு அமைவாக சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசல் காசீமை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது,19-10-2015 திங்களன்று மதியம் 12.00 மணிக்கு கொழும்பில் அமைச்சுக் காரியாலத்தில் சந்திக்க நேரம் ஒதுக்கி தந்தார்.
![hafiz-nazeer1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/01/hafiz-nazeer11.jpg?w=448&h=560)
இதன் காரணமாக அபிவிருத்திக் குழுவின் ஏழு பேர் அடங்கிய குழுவினர் அமைச்சரை சந்திக்க ஞாயிறன்று சென்ற போது ,இக்குழுவில் இணைந்துகொள்ள சம்மதித்த குழுவின் பொருளாளர் ZA. ஹிதாயத்துல்லாஹ் இறுதிநேரத்தில் இணைந்துகொள்ள தவறிவிட்டார்.
கொழும்பு சென்ற நாங்கள் ,திங்கள் காலை முதலமைச்சருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி நாங்கள் வந்திருக்கும் விடயத்தை தெரியப்படுத்தியபோது, “நான் சுகயீனமாக இருப்பதாகவும், திருகோணமலை செல்ல வேண்டி இருப்பதாகவும்” கூறி எங்களை சந்திப்பதை தவிர்த்துக்கொண்டார்.
அதன் பின்னர் குறித்த நேரத்துக்கு சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசல் காசீமை ,அவரது அமைசுக் காரியாலயத்தில் ஏறாவூர் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினராகிய நாங்கள் சந்தித்து வைத்தியசாலையின் அவசர தேவைகளை விரிவாக வைத்தியர் MHM.தாரிக் மூலம் எடுத்துரைத்தோம்.
இதனை செவியுற்ற சுகாதார ராஜாங்க அமைச்சர், ஐந்தரைக் கோடி ரூபாவுக்கான மூன்று மாடிக் கட்டிடத்தையும், நாற்பத்தைந்து லட்சம் ரூபா செலவில் லிப்ட் வசதியையும் முதலில் ஏற்படுத்தி தருவதோடு ,ஏனைய விடயங்களை கவனத்தில் எடுப்பதாகவும் தெரிவித்து எங்களை மகிழ்வுடன் வழியனுப்பி வைத்தார்.
நடந்த விடயங்கள் SMS மூலமாக முதலமைச்சருக்கு தெரியப்படுத்திவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருக்கையில் ,இரவு 11.00 மணியளவில் எனது தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய முதலமைச்சர் ,என்னையும்,அபிவிருதிக்குழுவையும் கடுமையாகவும்,காரமாகவும் கண்டித்து பேசினார்.
சுகாதார அமைச்சரும் நான்தான்,முதலமைச்சரும் நான்தான், என்னை மீறி ஊரில் எந்த அபிவிருத்திகளும் நடக்க முடியாது.சுகாதார அமைச்சர் பைசல் காசிமினால் ஒரு துரும்பைக்கூட எனக்கு தெரியாமல் கொண்டுவரமுடியாது என்று கூறிய முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா என்னை அனுசரிக்காத காரணத்தினால் அவரது புன்னக்குடா வீதி திருதப்பணியை இடை நிறுத்தி இருக்கிறேன் என்றும், அதேபோன்று ஏறாவூர் ரஹ்மானிய மகா வித்யாலய கணணி ஆய்வுகூட திறப்பு விழாவையும் இடை நிறுத்தி இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சர் பேசுகையில் ,நான் போட்ட பிச்சையால் வந்த அபிவிருத்திக் குழுவினர் என்னை மீறி செயற்பட்டதால் நாளையிலிருந்து உடனடியாக இக்குழுவை கலைப்பேன் என்றும், நீங்கள் எல்லாம் எனக்கு வாக்களிக்க தேவையில்லை ,எனக்கு எப்படி வெல்வது என்று தெரியும் என்றும் கூறி உங்கள் அரசியல் விளையாட்டெல்லாம் என்னிடம் பலிக்காது என்று சொல்லிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.
அன்பின் சகோதரர்களே,
நமதூர், நமது பாசாலை, நமது வைத்தியசாலை, நமதூர் வீதிகள், இவைகளின் அபிவிருத்திக்கு யார் உதவி செய்தாலும் அதனை பெருமனதுடன் ஏற்றுக்கொண்டு ஆதரவு வழங்குவதே ஒரு உயர்ந்த அரசியல் வாதியின் பண்பாக இருக்க வேண்டும்.
மக்களின் வாக்குகளை பிச்சையாகப் பெற்று, ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாமே என்னால்தான் முடியுமென தம்பட்டமடித்த, நான், நான் என்று வாழ்ந்த எவரும் நிம்மதியாக வாழ்ந்த சரித்திரமே இல்லை!!
Leave a comment