‘சிரியா-ரஷ்யா கூட்டணி வெற்றி பெறாவிட்டால் அழிவே ஏற்படும்’: அஸாத்

syriaடமஸ்கஸ்: சிரியா, ரஷ்யா, ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் கூட்டணி வெற்றி பெற்றேயாக வேண்டும் அல்லா விட்டால் முழு பிராந்தியமும் அழிவையே எதிர்நோக்கும் என்று சிரியாவின் அதிபர் பஷர் அல் அஸாத் கூறியுள்ளார். ‘சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திவரும் தாக்குதல்களால் பாதகமான விளைவுகளே ஏற்பட்டுள்ளன- அதாவது பயங்கரவாதம் பரவுவதற்கே அது வழியமைத்துள்ளது’ என்றும் அஸாத் விமர்சித்துள்ளார்.

ரஷ்யா சிரியாவில் மேலும் பல விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளின் நிலைகளை இலக்குவைத்தே தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா கூறுகின்றது.

Published by

Leave a comment