- உசேன்
காத்தான்குடி: தேவையில்லாத விடயங்களுக்கு பிரிஸ்டல் போர்ட்டில் நாலுவரி யாரோ ஒருவர் எழுதிக்கொடுத்ததை தாங்கிக்கொண்டு நிற்பதற்கும் காத்தான்குடி முன்னணியில் திகழ்கிறது. தேவையான விடயங்கள் எத்தனையோ இருக்கும்போது, “நாம் ஈமான் கொண்டோர்” அமைப்பின் இன்றைய வெள்ளி ஆர்ப்பாட்டம் புஷ்வானமானதாக ஊர்மக்கள் சந்திபொந்துகளில் கதைத்துத் திரிவதைக் காண முடிகிறது.
“கட்டப்பட” வேண்டியவன், “கத்து” அடிக்கப்பட வேண்டியவன், கல் எறிந்து கொல்லப்பட வேண்டியவன், வட்டிக்கடைக்காரன், பாலியல் துஷ்பிரயோகக் காரன், பெருங்கள்ளன், கஞ்சா மற்றும் போதைக்காரன்… இப்படியே அடுக்கிக்கொண்டுபோகும் எத்தனையோ “தகைமை”யையும் “புகழை”யும் உடையவர்கள் ஊருக்குள்ளும் சில அமைப்புக்குள்ளும் இருக்கும்போது, கேவலம் “அசாத் சாலிக்கு பாடம் படிப்பிக்கப் போகிறோம்” என்று அரசியல் “வாலி”பிடிக்கும் ஓர் கூட்டம் இந்த புஷ்வான வேடிக்கையை ஜூம்ஆவின் பின்னர் கைத்தாங்கி நின்றது.
வேலையில்லாத இந்த “ஈமான் கொண்டோர்” தங்களது “பிள்ளை குட்டி”களை படிக்க வைப்பதில் கவனம் செலுத்ததுமானால், காத்தான்குடி நிச்சயம் முன்னேற்றப்பாதையை அடையும் என எதிர்பார்க்கிறேன்.
ஈமான் கொண்டீர்களா இல்லைய என்பது அல்லாஹ் ஒருவன் மாத்திரமே அறிந்த விடயம்.
நூறுவீதம் முஸ்லிம்கள் வாழும் ஊரில் நூறு வீதம் ஈமான்கொண்டோர்கள் வாழ வில்லை. இதனால்தான் மேற் கூறிய அனைத்து தகுதியுடையோர்களும் எமது ஊரில் முன்வரிசையில் அமர்த்தப்படுகின்றனர்ykk.
யுவர்காத்தான்குடிக்காக உசேன்

Leave a comment