அமெரிக்காவில் இந்த வருடத்தில் நடந்த 294வது துப்பாக்கிச் சூடு

us murderநியுயோர்க்: அமெரிக்காவில் ஒரெகான் மாகாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நடந்துள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். யும்ப்குவா கொமியுனிட்டி கல்லூரியில் நடந்துள்ள இந்தத் துப்பாக்கித் தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்துடன் சேர்த்து இந்த வருடத்தில் அமெரிக்காவில் நடந்த இருநூற்று தொண்ணூற்று நான்காவது ஒட்டுமொத்த துப்பாக்கி சூடு இதுவாகும். ஒரொகொன் மாநிலத்தில் றோஸ்பேர்க் என்ற சிறிய நகரத்தில் பிரிட்டனில் பிறந்த இருபத்தியாறு வயதான கிறிஸ் ஹார்ப்பர் மேர்சர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

us murder

பின்னர் அவர் பொலிஸாரால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தாக்குதலால் விரக்தியடைந்த அதிபர் ஒபாமா, அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

Published by

Leave a comment