நிலத்தில் வீழ்த்தப்பட்ட சிரியாவின் அகதித் தந்தையையும் இரு பிள்ளைகளையும் ஆரத்தழுவி அரவணைத்தார் மனித நேயமிக்க கிறிஸ்டியானோ ரொனால்டோ

ronaldo– MJ

மெட்ரிட்: மனித நேயம் நிலத்தில் வீழ்த்தப்பட்டாலும், அதனை உயர்த்தும் மானிடர்களும் உலகெங்கிலும் இருந்து வருகின்றனர். கடந்தவாரம் சிரியாவிலிருந்து தனது இரு பிள்ளைகளுடன் ஐரோப்பாவிற்குள் அகதிகளாக நுழைய முற்பட்டபோது, ஹங்கேரி பொலிஸாரின் கெடுபிடிக்குள் சிக்குண்டு அகதிகள் அங்குமிங்கும் ஓடினர்.

இவ்வேளையில் தனது கமெராவில் அகதிகளை படமெடுத்துக்கொண்டிருந்த ஹங்கேரி நாட்டின் பெண் ஊடகவியலாளர், தனது காலால் தப்பியோடும் அகதிகளை நிலத்தில் வீழ்த்திக்கொண்டிருந்தார்.

இவரது இச்செயலில் உலக மக்களை நோகடிக்கச் செய்த சம்பவமே ஒஸாமா அப்துல் மொஹ்ஸின் மற்றும் அவரது குழந்தைகளுடடையது. கடந்த வாரம் உலகை அதிர்ச்சியடைய வைத்த இந்த குறுங்காணொளி, மனித நேயத்துக்கு ஏற்பட்டிருக்கும் கேடாக விமர்சிக்கப்பட்டிருந்தது.

தனது இரு பிள்ளைகளுடன் ஐரோப்பாவிற்குள் நுழைந்த மொஹ்ஸின் தனது ஒரு மகனை தன் தோளில் சுமந்தவாறு பொலிஸ் பிடிpயிலிருந்து தப்பிக்க எத்தனிக்கும் வேளையில் குறித்த பெண் ஊடகவியலாளரால் காலால் தடுக்கச் செய்து நிலத்தில் குழந்தையுடன் மொஹ்ஸின் வீழ்த்தப்பட்டார்.

அதன் பின்னர் தனது இரு குழந்தைகளுடன் ஸ்பெயின் நாட்டை சென்றடைந்த மொஹ்ஸின் குடும்பத்திற்கு ஸ்பெயின் நாட்டின் முதன்மை அணியும் உலகப் புகழ்பெற்ற கழகமுமான ரியல்மெட்ரிட், மகத்தான வரவேற்பு அளித்தது.

ரியல் மெட்ரிட் கழக நம்பிக்கை நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, முஹ்ஸினையும், அவரது இரு புதல்வர்களையும் ஆரத்தழுவி அரவணைத்ததுடன், ஏனைய வீரர்களும் மொஹ்ஸின் குடும்பத்திற்கு மகிழ்ச்சியான வரவேற்பை அளித்தனர்.

ரியல் மெட்ரிட் கழகமும் தனது அன்பளிப்புக்களையும் வரவேற்பையும் மகிச்சியுடன் அளித்திருக்கிறது.

மொஹ்ஸின் குடும்பத்திற்கு ரியல் மெட்ரிட் கழக விருந்தினர் எனும் அந்தஸ்தில் உதைப்பந்தாட்டப் போட்டிகளைக் காணவும், ஸ்பெயினில் இடம்பெறும் கூடைப்பந்தாட்ட லீக் மற்றும் ஐரோப்பிய உதைப்பந்தாட் லீக் ஆகிய போட்டிகளைக் காணவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக ரியல்மெட்ரிட் கழகத்தின் தலைவர் ஃபுளோரென்டினோ பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னரும் ரியல் மெட்ரிட் சிரிய அகதிகளுக்கு மில்லியன் கணக்கான யூரோக்களை அள்ளி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.MJ

Published by

One response to “நிலத்தில் வீழ்த்தப்பட்ட சிரியாவின் அகதித் தந்தையையும் இரு பிள்ளைகளையும் ஆரத்தழுவி அரவணைத்தார் மனித நேயமிக்க கிறிஸ்டியானோ ரொனால்டோ”

  1. Alhamdhilillah

Leave a reply to mohamedrislan Cancel reply