சமயம் சம்பந்தமான மாநாட்டில் அரை நிர்வாணப் பெண்கள் போராட்டம்

  • எம்.ஐ. அப்துல்நஸார்

franceபரிஸ்: பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் திடீரென நுழைந்த அரை நிர்வாணப் பெண்கள் இருவர் மாநாட்டில் குழப்பம் விளைவித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த பெண்கள் தமது உடலின் முன் பகுதியிலும் பின் பகுதியிலும் ‘யாரும் என்னை கட்டாயப்படுத்த முடியாது’ என்ற வாசகத்தை எழுதியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேடையில் நடுப்பகுதிக்கு ஏறிய இந்தப் பெண்கள் தொடர்ந்து கோஷமெழுப்பியதோடு இறுதியில் பாதுகாப்புத் தரப்பினரின் தலையீட்டுடன் மேடையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

france

இந்த சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த ஒருவரால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவருக்கு காலால் உதைத்த ஒளிப்பதிவுக் காட்சி இணையத் தளங்களில் தற்போது பரவிவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

france 1

இந்தப் பெண்கள் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை

குறித்த பெண்கள் பெமன் என அழைக்கப்படும் தீவிர பெண்கள் அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்டுகிறது.

Published by

Leave a comment