பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே சிறுமி கொலை!

child gambahaகம்பஹா: கொட்டதெனியாவ பகுதியில் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நான்கரை வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கொலைசெய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொட்டதெனியாவ பகுதியில் வைத்து காணாமல் போன குறித்த சிறுமி வீட்டிற்கு அருகிலுள்ள வயல் காணியில் இருந்து நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் நேற்று முன்தினம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். தனது பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த போது நேற்றுமுன்தினம் குறித்த சிறுமி காணாமல் போனமை குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்திருந்த பொலிஸார் வீட்டுக்கு அருகில் இருந்த வயல் காணியில் இருந்து சிறுமியின் சடலத்தை மீட்டிருந்தனர்.

Published by

Leave a comment