விசாரணை அறிக்கைகளை கோரினார் பிரதமர்

ranilகொழும்பு: பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ், சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னலிகொட, ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் மற்றும் காணாமல் போனோர் பற்றி இது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் நிலை பற்றி தமக்கு அறியத்தருமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பிட்ட விசாரணைகள் தொடர்பில் சட்டப்படி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தமக்கு உடனடியாக அறியத்தருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயகவின் மூலம் சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், இரகசிய பொலிஸ் பணிப்பாளர் மற்றும் தீவிரவாத விசாரணை அலுவலக பணிப்பாளர் ஆகிய தலைவர்களுக்கு இது குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Published by

Leave a comment