குடியேறிகளால் ஜெர்மனி பெரும் மாற்றமடையும்: அங்கேலா மேர்க்கெல்

angola merkel germanyபேர்லின்: ஜேர்மனிக்குள் குவியும் குடியேறிகளின் வருகை அடுத்துவரும் ஆண்டுகளில் நாட்டையே மாற்றிவிடும் என்று அந்நாட்டின் ஆட்சித் தலைவி அங்கேலா மேர்க்கல் தெரிவித்துள்ளார். இதற்காக அறுநூறு கோடி அமெரிக்க டொலர் மதிப்பீட்டிலான செயற்திட்டம் ஒன்றையும் அவர் அறிவித்திருக்கிறார். அகதித்தஞ்சக் கோரிக்கைகளை வேகப்படுத்துவது மற்றும் புதிய குடியேறிகளுக்கான வீடுகளைக் கட்டுவது ஆகியவையும் இந்த திட்டங்களுக்குள் அடங்கும்.

குடியேறிகளின் எண்ணிக்கை மலைக்க வைப்பதாக இருப்பதாகவும் இந்த நெருக்கடியை ஜெர்மனியால் மட்டும் தனியாகத் தீர்க்க முடியாது என்றும் மேர்க்கல் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவு சட்டங்களை கடந்த வார இறுதியில் தற்காலிகமாக தளர்த்தியதன் மூலம் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தைத் தான் தடுத்திருப்பதாக ஜெர்மன் அரசு தெரிவித்துள்ளது.

Published by

Leave a comment