காத்தான்குடி: தஹ்வத் தப்லீக் அழைப்பு பணிக்காக இலங்கைக்கு வருகை தந்த சவுதி அரேபியா ரியாத் மலிகுஸ் ஸுஹுத் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விருவுரையாளர் கலாநிதி அஷ் ஷைக் மாஹிர் (Phd) அவர்கள் கலந்து கொண்ட வாலிபர்களுக்கான விசேட நிகழ்வு “SL Youth Muslim Organization” இன் ஏற்பாட்டில் நேற்று காத்தான்குடி மெத்தை பள்ளிவாயலில் சிறப்பாக நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ் .
அல்லாஹ்வின் உதவியால் நேற்று இரவு காத்தான்குடி மெத்தை பெரிய பள்ளிவாயலில் குறிப்பாக வாலிபர்களை மையப் படுத்தி நடைபெற்ற இன் நிகழ்வில் குவைத்தில் இருந்து தஹ்வாவுக்காக வருகை தந்த வாலிபரால் மிகவும் அழகிய முறையில் கிரா அத் ஓதியதுடன் , அஷ் ஷைக் மாஹிர் கலாநிதி அவர்களினால் தற்கால சூழ் நிலையில் பொதுவாக வாலிபர்கள் தம்மை அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்றவர்களாக ஒவ்வொருவரும் தம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் பல விடயங்களை சுட்டிக் காட்டியதோடு முக்கியமாக நான்கு விடயங்களில் அனைத்து வாலிபர்களும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்ற கருத்தில்,
- முதலாவதாக நல்ல சூழல்களில் தம்மை ஆக்கி கொள்ள வேண்டும்
- இரண்டாவது நல்ல நண்பர்களை தெரிவு செய்து அவர்களோடு தொடர்புகளை பேண வேண்டும்
- மூன்றாவது பாவங்களை தவிர்ந்து அமல்களில் போட்டி போட வேண்டும்
- நான்காவது ஒவ்வொரு நாளும் எம்மை நாம் சுய விசாரணை செய்து கொள்ள வேண்டும்
என்ற நான்கு விடயங்களையும் மையப் படுத்தி மிக அழகாக, சிறந்த உதாரணங்களுடன் தம் கருத்துக்களை வாலிபர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அறிவூட்டப் பட்டது.
இதில் குறிப்பாக இன்றைய காலத்தில் தவறான சூழல்களே வாலிப சமூகம் சீரழிய அடிப்படை காரணமாக உள்ளதாக சுட்டிக் காட்டியதுடன், ஒவ்வொருவரும் நல்ல சூழல்களை அமைத்துக் கொள்ள வேண்டும், என்பதுடன் நல்ல சூழல்களில் எமது நேரங்களை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
மேலும் ஆரம்ப நிகழ்வாக மௌலவி அமீன் பாலாஹி அவர்களினால் உரை நிகழ்த்தப் பட்டதுடன், மேலும் கலாநிதி மாஹிர் அவர்களால் நிகழ்த்தப் பட்ட வாலிபார்களுக்கான விசேட உரையை அஷ் ஷைக் முப்தி அப்துர் ரஹ்மான் அவர்களால் தமிழ் மொழி பெயர்ப்பு செய்யப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
– SL Youth Muslim Organization
Published by


Leave a comment