அகதிகளுக்கு 600 கோடி டொலர் ஒதுக்கியது ஜெர்மனி

germany refugeeபேர்லின்: முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஜெர்மனிக்குள் வரும் பெருமளவிலான குடியேறிகளின் தேவைகளை சமாளிப்பதற்காக அறுநூறு கோடி அமெரிக்க டொலர் மதிப்பீட்டிலான செயற்திட்டம் ஒன்றை ஜெர்மனி அறிவித்திருக்கிறது. அகதித்தஞ்சச் கோரிக்கைகளை வேகப்படுத்துவது மற்றும் புதிய குடியேறிகளுக்கான வீடுகளை கட்டுவது ஆகியவையும் இந்த திட்டன்களுக்குள் அடங்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவு சட்டங்களை கடந்த வார இறுதியில் தற்காலிகமாக தளர்த்தியதன் மூலம் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தைத் தான் தடுத்திருப்பதாகவும் ஜெர்மன் அரசு தெரிவித்துள்ளது. கடந்த வார இறுதியில் மட்டும் சுமார் இருபதாயிரம் குடியேறிகள் ஜெர்மனிக்குள் வந்து சேர்ந்திருப்பதாகவும், இன்று திங்கட்கிழமை மேலும் பதினோறாயிரம் பேர் ஜெர்மனிக்குள் வரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

germany refugee
அகதிகளை வரவேற்கும் ஜேர்மனி மக்கள்

Published by

Leave a comment