“வைபர் மூலம் ஏற்படுத்தப்படும் தொலைபேசி தொடர்புகளை தடுப்பதையோ ரகசியமான முறையில் ஒட்டு கேட்பதையோ அன்றைய இலங்கை அரசாங்கம் அறிந்திருக்கவில்லை”: சந்திரிகா

chandrika maithiriகொழும்பு: கடந்த ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், வைபர் ஹெப் தொழிற்நுட்பம் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தகவல்களை பரிமாறிக்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு வசதியே வைபர் ஹெப் எனப்படுகிறது.

வைபர் மூலம் ஏற்படுத்தப்படும் தொலைபேசி தொடர்புகளை தடுப்பதையோ ரகசியமான முறையில் ஒட்டு கேட்பதையோ அன்றைய இலங்கை அரசாங்கம் அறிந்திருக்கவில்லை என சந்திரிக்கா இந்திய ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார். அதேவேளை மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக பதவிக்கு வந்திருந்தால், தான் உட்பட சிலர் மரணிக்க வாய்ப்பிருந்தாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

chandrika maithiri
வைபர் ஹெப் தொழிற்நுட்பம் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தகவல்களை பரிமாறிக்கொண்டேன்

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்துடன் இருக்கும் தனக்கு மூன்று முக்கியமான எதிர்பார்ப்புகள் இருப்பதாகவும் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ள காணிகளை மீள பெறுவது, காணாமல் போன தமிழர்கள் குறித்து விசாரணை நடத்துவது, இடம்பெயர்ந்தவர்களை மீள குடியேற்றுவது ஆகியனவே தனது எதிர்பார்ப்பு எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Published by

Leave a comment