ஒரு மில்லியன் யூரோவை அகதிகளுக்கு நன்கொடையாக வழங்கியது ரியல் மெட்ரிட் கழகம்

real madrid refugee– MJ

மெட்ரிட்: சிரியாவில் இருந்து ஐரோப்பாவிற்குள் நுழைந்துள்ள அகதிகளுக்காக மனித உரிமை அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க அகதிகளுக்கான நன்கொடைகளையும், சேவைகளையும் ஐரோப்பிய நாடுகள் வழங்கி வருகின்றன. இந்த வகையில் ஸ்பெயின் நாட்டின் முன்னணிக் கழகமும், உலகப் புகழ்பெற்ற சிறந்த கழகங்களுள் ஒன்றுமான ரியல் மெட்ரிட் ஒரு மில்லியன் யூரோக்களை நன்கொடையாக வழங்கி இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளுள் ஸ்பெயினும் அகதிகளுக்கான நன்கொடை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இந்த ஒரு மில்லியன் யூரோக்கள் ஸ்பெய்ன் நாட்டின் ஊடாக அகதிகளுக்கான நன்கொடையாக கையளிக்கப்படும் என ரியல் மெட்ரிட் கழகத்தின் தலைவர் ஃபுளோரெண்டியோ பீரிஸ் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

real madrid refugee
ரியல் மெட்ரிட் கழக அன்பளிப்புக்களுடனும் ஐரோப்பியக் கனவின் வெற்றிக் களிப்புடனும் அகதிக் குடும்பம் ஒன்று

ஐரோப்பாவின் முன்னணிக் கழகங்களான ஜேர்மனியின் பேயன் மினிக் மற்றும் ஸ்கொட்லாந்தின் செல்டிக் கழகங்கள் நன்கொடைகளை வழங்கி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.MJ

refugee real madrid
ரியல் மெட்ரிட் கழக அன்பளிப்புக்களுடனும் ஐரோப்பியக் கனவின் வெற்றிக் களிப்புடனும் அகதிச் சிறுவன்

Published by

Leave a comment