அகதி இல்லாதோரும் ஐரோப்பாவின் அகதிகளாகினர்!

refugee in germany– MJ

பேர்லின்: தற்பொழுது ஐரோப்பாவிற்குள் ஏற்பட்டிருக்கும் அகதி-குடியேறிகளின் புரட்சிகள் உலக மக்களின் பார்வையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிரிய மக்களுக்கான அனுதாபங்களாகவே பார்க்கப்பட்டு வருகின்றபோதிலும், நிஜத்தில் அகதி இல்லாதோரும் ஐரோப்பாவிற்குள் அகதிகளாக நுழைந்துள்ளதே உண்மையாகும்.

சிரியாவில் ஏற்பட்டிருக்கும் உந்நாட்டு கிளர்ச்சியில் பல இலட்சம்பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஐரோப்பாவிற்குள் கடல் வழியாக நுழைந்தவர்கள் இலவசமாக தப்பிப் பிழைத்து கடலைக் கடந்தார்களா அல்லது பல ஆயிரம் டொலர்கள் முகவர்களுக்கு வழங்கி ஐரோப்பாவின் கரையைத் தொட்டார்களா என்ற சந்தேகங்கள் தற்பொழுது அரபுலகிலும், வெளியிலும் எழுந்துள்ளன.

refugee inger
ஜேர்மனை வந்துசேர்ந்த அகதிகள்

துருக்கியூடாக ஐரோப்பாவிற்குள் நுழைந்த பலர், தங்களது இறுதிக் கனவு ஜேர்மனியேதான் என்ற ஒரே குரலில் ஒன்றிணைந்திருந்தனர். ஐரோப்பாவின் மேற்கு எல்லையின் நிலத்தொடர்பு ஜேர்மனியுடன் நிறைவடைகிறது. ஜேர்மனுக்குள் நுழைந்தால் போதுமானது. அதன் பின்னர் எப்படியாவது பிரிட்டனுக்குள் நுழைந்துவிடலாம் என்ற எண்ணமும் பலரிடத்தில் இருந்து வருகிறது.

refugee in germany
ஜேர்மனை வந்துசேர்ந்த அகதிகள்

உண்மையில் அகதியாக தஞ்சமடைய வேண்டுமானால் ஐரோப்பாவில் எத்தனையோ நாடுகள் துருக்கிக்கு அருகில் காத்திருக்கின்றன. ஆனால், அகதிகளின் இலக்கு ஜேர்மனை சென்றடைவதே என்பதாலேயே திட்டமிட்டு ஹங்கேரியை வந்து சேர்ந்தனர் அகதிகள்.

முகவர்களிடம் பணம் வழங்கி அகதி என்ற பேரில் கடல் வழியாக வந்திருந்த அகதிகள், சுமார் 25 பேர் அண்மையில் கடலில் மூழ்கி கொல்லப்பட்டிருந்தனர். இவர்களுள் ஓரு சிறுவனும், தாயும் கொல்லப்பட்டவர்களுள் உள்ளடங்கி இருந்தனர். மேலும், ஒஸ்திரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குளிரூட்டி லொறி ஒன்றில் அனாதரவான நிலையில் 71 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

refugee route

அகதி என்ற பேரில் ஐரோப்பாவிற்குள் குடியேறுபவர்களுக்கு, ஐரோப்பிய நாடுகளும், அங்குள்ள மக்களும் இன்று உதவி வழங்குவதற்கு பிரதான காரணமே இந்த இரு சம்பவங்களே பிரதானமாக அமைந்திருந்தன.

இவ்வாறு அகதி மூலமாக ஐரோப்பாவுக்குள் குடியேறிய இவர்கள், ஜேர்மனுக்குள் நுழைந்ததும், தாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம் என்ற ரீதியில் தங்களது கைவிரல்களை “வி” வடிவில் சைகை செய்து காண்பித்திருந்தனர். துருக்கியில் இருந்து பல ஐரோப்பிய நாடுகளைக் கடந்தபோதிலும் இல்லாத மகிழ்ச்சி ,ஜேர்மனை தொட்டபொழுது இக்குடியேறிகளுக்கு மட்டில்லா மகிழ்ச்சியைக் கொடுத்திருந்ததை உணர முடிந்தது.

real madrid refugee
ஜேர்மனை வந்துசேர்ந்த அகதிகள்

சிரியாவில் இருந்து நுழைந்த அகதிகளுள், ஆசிய, ஆபிரிக்க நாட்டவர்களும் உள்ளடங்கி இருந்தனர். இவற்றை எடுத்து நோக்கும்போது, முகவர்கள் மூலமாக பணம் செலுத்தப்பட்டே அகதி என்ற போர்வையில் ஐரோப்பாவுக்குள் நுழைகின்றனர் இவர்கள் என்பதை தெளிவாக நோக்க முடிகிறது!MJ

Published by

Leave a comment