அகதிகளை அழைத்துவர ஒஸ்திரியா தொடர்ந்தும் பேருந்துகளை அனுப்புகிறது

refugeeவியன்னா: ஹங்கேரியில் பலநாட்களாக நிர்க்கதியான நிலையில் உள்ள குடியேறிகளை அழைத்துவருவதற்காக ஒஸ்திரிய அதிகாரிகள் ஹங்கேரியின் எல்லைக்கு இரண்டாவது நாளாகவும் பேருந்துகளை அனுப்பியுள்ளனர். அழைத்துவரப்பட்டவர்கள் முதற்கட்ட முகாம்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் வரையில் ஒஸ்திரியாவுக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அவர்களில் பலர் ஜெர்மனிக்கு பயணித்துள்ளனர். குடியேறிகள் வந்துகுவியும் இடங்களுக்கு உள்ளூர் மக்களும் பெருமளவில் சென்று, அவர்களை கைதட்டி வரவேற்றுவருகின்றனர்.

refugee

குடியேறிகள் நெருக்கடியில் தமது நாடும் ஒட்டுமொத்த ஐரோப்பாவும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜெர்மனிய ஆட்சித் தலைவி அங்கேலா மேர்க்கல் தனது கூட்டணி அரசாங்கத்தின் பங்காளிகளை சந்திக்கவுள்ளார்.

Published by

Leave a comment