“ராஜாங்க அமைச்சையோ, பிரதியமைச்சர் பதவியையோ தான் ஏற்க போவதில்லை” பௌசி

Fawzy- fouziகொழும்பு: அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி தனக்கு கிடைக்கும் என்று தான் இன்னும் எதிர்பார்ப்பில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார். ராஜாங்க அமைச்சையோ, பிரதியமைச்சர் பதவியையோ தான் ஏற்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.பௌசி, இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

100 நாள் அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பதவி வகித்த ஏ.எச்.எம். பௌசி, நேற்றைய தினம் நடந்த அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் வைபவத்தில், சத்தியப் பிரமாணம் செய்யவில்லை.

இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள பௌசி, அது ஜனாதிபதிக்கு இருக்கும் உரிமை, அவற்றை ஜனாதிபதி நிறைவேற்றுவார். ஜனாதிபதியின் தீர்மானத்திற்கும் நாம் அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

நான் கட்சியில் இருக்கும் சிரேஷ்ட உறுப்பினர் என்பதை ஜனாதிபதி அறிவார். குறிப்பாக முஸ்லிம் மக்களின் நலனுக்காக பணியாற்ற முடிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இருக்க வேண்டும். ஏனைய அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்டவர்கள். இதனால், அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றேன் என ஏ.எச்.எம். பௌசி கூறியுள்ளார்.

Published by

Leave a comment