கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது காத்தான்குடியில் ஹிஸ்புல்லாவும், அப்துர்ரஹ்மானும் போட்டியிட்டனர். அல்லாஹ்வின் நாட்டம் ஹிஸ்புல்லா தோல்வியடைந்தார். அல்லாஹ் எதை நாடியுள்ளானோ அதுதான் இடம்பெற்றது. அவருக்கு இதைவிட சிறந்த பதவியை நாடியிருக்கிறானோ அல்லது 5 வருடங்களுக்கு தான் செய்த தவறை நினைப்பதற்காக அப்படியானதொரு சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளானோ தெரியாது.
இதற்காக நாம் வென்று விட்டோம் என அப்துர் ரஹ்மான் தரப்பு கூறுவதும், தாம் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் என ஹிஸ்புல்லா தரப்பு கூறி முரண்பட்டுக்கொள்வதும் நல்ல விடயமல்ல.
சகோதரர்களே!
யார் ஆட்சிக்கு வரவேண்டும் யார் ஆட்சியில் இருக்க கூடாது என தீர்மானிப்பது அல்லாஹ்வே. இந்த பிரதேசத்திற்கு ஹிஸ்புல்லாவும் தேவை. அப்துர்ரஹ்மானும் தேவை. நாளை இவர்கள் ஒன்றாக சாப்பிடுவார்கள். ஒன்றாக பயணிப்பார்கள். நாம் ஏன் இன்னும் ஆளுக்காள் முகம்பார்க்காமல் திரிகின்றோம்.
இந்த அரசியலால் வீட்டில் கணவன் ஒரு கட்சி. மனைவி ஒரு கட்சி. சகோதரர்களுக்கிடையே பிளவு. அயலவர்களுக்கிடையே பிளவு. தந்தை மகனுக்கிடையே பிளவு. ஏன் இந்த வேற்றுமை சகோதரர்களே!
நாம் முஸ்லிம்கள். அரசியல் எல்லாம் முடிந்து விட்டது. ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் வாழ்வோம்.
ஆனால் ஒன்றை மட்டும் கூறுகின்றேன். இந்த காத்தான்குடி பிரதேசம். பல கல்விமான்கள், கூடுதலான உலமாக்கள், பல தவ்வா அமைப்பக்கள், வெளியூர்களில் தொழில் நிமித்தம் செல்வோர் அதிகமாகவுள்ள ஒரு ஊர்.
இந்த பிரதேசத்திற்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கட்டாயம் தேவை. அது ஹிஸ்புல்லாவா இருக்கலாம். அப்துர் ரஹ்மானாக இருக்கலாம். யார் நல்லதை செய்கிராறோ அதை தடுக்க வேண்டாம்.
அன்னிய சகோதரர்களிடம் போய் கைகட்டி நிற்க முடியாது சகோதரர்களே! நாம் ஒற்றுமைப்பட்ட ஒரு சமூகமாக முன்மாதிரியானதொரு சமூகமாக வாழ்வோம்! இன்ஷா அல்லாஹ்!!
உரை: மௌலவி நௌபல்
இடம்: ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப்பள்ளிவாயல், புதிய காத்தான்குடி
![mimber[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/07/mimber1.jpg?w=150&h=122)
Leave a reply to S.Vivekananthan. Cancel reply