லண்டன்: இலங்கை கிரிக்கட் அணியினர் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்துக்கான கிரிக்கட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு விளையாடவுள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தின் போது 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர், 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர் மற்றும் இருபது ஓவர் போட்டி ஒன்றிலும் விளையாடவுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டுக்க பின்னர் 2 ஆவது டெஸ்ட் போட்டிக்காக செஸ்டர் லீ ஸ்ட்ரீட் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 3 ஆவது டெஸ்ட் போட்டி லோட்ஸில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2016 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை ஹெடிங்லேயில் முதலாவது டெஸ்டும் 27 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் இரண்டாவது டெஸ்டும் ஜ_ன் 9 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை லோட்ஸில் மூன்றாவது டெஸ்ட் டும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஜுன் 21, 24, 26, 29 மற்றும் ஜூலை 2 ஒருநாள் போட்டிகளும், ஜூலை 5 இருபது ஓவர் போட்டியும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. கடந்த 5 வருடங்களின் பின்னர் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் இலங்கை விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற் கொண்டு விளையாடவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. இதன்போது 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித்தொடர், 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் சர்வதேச போட்டித் தொடர் மற்றும் இருபது ஓவர் போட்டி ஒன்றிலும் விளையாடவுள்ளனர்.
இந்த சுற்றுப்பயணம் கடந்த 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கிரிக்கட் தொடரில் இடம்பெற்ற சூதாட்ட முறைகேட்டின் பின்னர் பாகிஸ்தான் அணி மேற்கொள்ளும் முதலாவது இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணம் ஆகும். எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி இங்கிலாந்து பயணமாகும் பாகிஸ்தான் அணியினர், டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னர் இரு பயிற்சிப் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளனர்.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகள் லோட்ஸ், ஓல்ட் ட்ரஃபோர்ட், எட்ஜ் பாஸ்டன் மற்றும் ஓவல் மைதானங்களில் நடைபெறவுள்ளதுடன், இருபது ஓவர் போட்டி ஓல்ட் ட்ரஃபோர்ட்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கட் தொடரின் போது இடம்பெற்ற சூதாட்ட முறைகேட்டில் பாகிஸ்தான் வீரர்கள் மொஹமட் அசீப், சல்மான் பட் மற்றும் மொஹமட் அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு போட்டித் தடையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர்களுக்கான போட்டித் தடை எதிர்வரும் செவ்வாய்க் கிழமையுடன் நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment