ரவூப் ஹக்கீம் தனிக்காட்டு ராஜா!

hakeemகொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனிக்காட்டு ராஜாவாக உருவேறி உள்ளார் என்று கிழக்கு மாகாணச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அநேக இடங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு மு. கா வெற்றி கண்டு உள்ளது. அத்துடன் மட்டக்களப்பில் மு. காவின் மரச் சின்னத்தில் போட்டியிட்ட அலி சாஹிர் மௌலானா வெற்றி கண்டு உள்ளார்.

மு. காவுடன் மேற்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் தேசியப் பட்டியல் ஆசனங்களை வழங்க ஐ. தே. க முன்வந்து உள்ளது.

இது சம்பந்தப்பட்ட பேச்சுக்கள் கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்றபோது ரணில் விக்கிரமசிங்க தரப்பில் நால்வர் வரை கலந்து கொண்டனர். ஆனால் ரவூப் ஹக்கீம் தனி ஒருவராக கலந்து கொண்டார். குறிப்பாக கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி மௌனிக்கப்பட்டு விட்டார் என்று தெரிகின்றது.

(மின்னஞ்சல்: தாய்நாடு)

Published by

Leave a comment