“காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் தனது தனித்துவத்தை இழந்துவிட்டது”

ramlanகாத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் தனது தனித்துவத்தை இழுந்து விட்டதாக முன்னால் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் NK றம்ழான் தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் இலங்கை திருநாட்டில் வாழ்கின்ற மாற்று மத சகோதரர்களால் மாத்திரமின்றி இலங்கையின் பாதுகாப்பு படை தொடக்கம் அரச உயர் அதிகாரிகள் வரையும் மிகவும் கன்னியமாகவும் கௌரவமாகவும் பார்க்கப்படுகின்ற ஒரு அமைப்பாகும்.

இச்சம்மேளனத்தை இந்த நாட்டில் வசிக்கும் அனைத்து இனத்தவர்களும் அரச உயர் அதிகாரிகளும் பாதுகாப்பு படை அதிகாரிகள் வரையும் போற்றுகின்ற அளவிற்கு மிக சமூகப் பொறுப்போடும் சமூக சிந்தனையோடும் எந்தவொரு இனத்திலும் இவ்வாரான ஒரு பொது அமைப்பு இல்லை என்ற அளவிற்கு மக்களின் நலனினும் மார்க்க விடயத்திலும் சமூகத்தின் தேவைகளை நோர்க்கமாகக் கொண்டு எந்த எதிர்பார்ப்புகளுமின்றி முழுமையாக தங்களை அர்ப்பணித்து செயற்படும் ஒரு பாரிய அமைப்பாகும்.

இச்சம்மேளனத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளிவயல்களும், 12க்கும் மேற்பட்ட பொது அமைப்புகளுமாக சுமார் 170க்கும் மேற்பட்ட முக்கிய அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்ற ஒரு பாரிய நிறுவனமாகும். இதன் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அரசியல் சார்ந்து காணப்படுது கவளையளிக்கின்றது. இதனால் சம்மேளனம் தனது தனித்துவத்தையும் புனிதத்தன்மையையும் இழந்து நிற்கின்றது.

ramlan
NK றம்ழான்

காலத்திற்கு காலம் தலைமைப் பொறுப்பையும் செயலாளர் பொறுப்பையும் ஏற்கின்ற சிலர் நேரடியாக அரசியலில் ஈடுபடும் ஒரு அரசியல் வாதியாக அல்லது ஒரு பக்கம் சார்ந்து பகிரங்கமாக அரசியல் செய்யும் ஒரு அரசியல் வாதியின் கையாட்களாக செயற்படுகின்றனர். இச் செயற்பாடு மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனத்தை சம்மேளனத்திற்கு எற்படுத்தியுள்ளதுடன் அதன் நம்பகத்தன்மைக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் என்பது கட்சி அரசியலுக்கு அப்பால் மக்களை நிருவாக மற்றும் மார்க்க ரீதியாக வழிநடாத்துகின்ற ஒரு அமைப்பாகும். இது ஒரு சிலரது சுய தேவைக்காக அரசியல் சாயம் பூசப்படுவதை ஒருபோதும் அங்கரிக்க முடியாது.

அரசியலில் ஈடுபடுகின்றவர்கள் சம்மேளனத்தின் தனித்துவத்தை பாதுகாக்க வேண்டும். அரசியலில் நேரடியாக ஈடுபடுவோரகள் அதன் அங்கத்துவத்திலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.  அதன் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் ஒரு அரசியல் கட்சி சார்ந்து செயற்பட்டதன் வெளிப்பாடே கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் காத்தான்குடியில் ஒரு அரசியல் வாதியின் ஆதரவாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவத்தை தடுத்து நிறுத்தவோ அல்லது மக்களை அமைதிப்படுத்தவோ நடவடிக்கை எடுக்கவில்லை. அல்லது குறித்த சம்பவத்தை பொதுவான ஒரு கண்னோட்டத்தோடு நடுநிலையாக நின்று கன்டிக்கவில்லை.

இவ்வாரான செயற்பாடு ஒரு தலைப்பட்சமானது இது சம்மேளனத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

Published by

Leave a comment