-
மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார்
கிழக்கு மாகாணத்தில் தனது பிரதேசங்களை பாரிய அளவில் அபிவிருத்தி செய்து ஏனையோர் பொறாமைப்படும் படி செய்த அரசியல்வாதிகள் என்றால் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் அக்கரைப்பற்று அதாவுல்லாவைக் குறிப்பிடலாம். ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் இவர்களை நிராகரித்திருந்தார்கள் இதனைப் பற்றி சிலர் குறிப்பிடும் போது,
“அக்கரைப்பற்று மக்கள், காத்தான்குடி மக்கள் நன்றி மறந்தவர்கள் தனது ஊருக்கு எவ்வளவோ அபிவிருத்தி செய்தவர்களுக்கு வாக்களிக்காது நிராகரித்து விட்டார்கள்“ என்கிறார்கள்.
காத்தான்குடி மக்களோ, அக்கரைப்பற்று மக்களோ அல்லது வேறு எந்த பிரதேசத்து மக்களோ அவிவிருத்திகளைக் கண்டு ஒரு போதும் மயங்குவதில்லை, அவர்களுக்கு அவிவிருத்தி என்பதற்கு மேலாக இந் நாட்டில் தங்களுடைய இருப்பு, அரசியல், கலை, கலாச்சார, மத உரிமைகள்தான் முக்கியம்.
அந்த உரிமைகள் கடந்த அரசாங்கத்தில் கேள்விக்குறியாக இருந்த போது குறித்த அந்த இரு அரசியல்வாதிகளும் ஊமைகளாக இருந்து விட்டார்கள் மட்டுமல்ல அந்த அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் இதனால்த்தான் மக்கள் அவர்களை நிராகரித்திருந்தார்கள்.
இந்நாட்டில் வாழும் சிறுபான்மையினமான தமிழ்-முஸ்லிம்-கிரிஸ்தவர்களுக்கு அபிவிருத்தி என்பதற்கு மேலாக தங்கள் தங்களது இருப்பும், மத அனுஸ்டானங்களும், கலை, கலாச்சார உரிமைகளுமே முக்கியமாக இருக்கின்றது என்பதை அரசியல்வாதிகள் உணர்ந்து அதற்கேற்றாப் போல் தங்களது நகர்வுகளை மேற் கொள்ள வேண்டும்.
அதற்காக அபிவிருத்திகள் செய்யாது இருந்து விடாதீர்கள்.


Leave a comment