வெற்றிக்களியாட்ட, அடிதடி ஊர்வலங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்

fireworksகாத்தான்குடி: நேற்று மாலை ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட வெற்றிக்களிப்பு களியாட்ட அதிரடி ஊர்வலத்தின் பின்னர், ஹிஸ்புல்லாஹ்வுக்கு இருந்து வந்த ஆதரவுகள் அவருக்கான பலத்த சரிவை ஏற்படுத்தி இருப்பதுடன், ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களின் மோசமான நடவடிக்கைகள் இன்று உலக முழுவதும் கேவலமாகப் பேசப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.

ஐ.ம.சு.கூ சார்பாகப் போட்டியிட்டு கடந்த தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட 7 பேருக்கு ஐ.ம.சு.கூ. தலைமை தேசியப்பட்டியல் ரீதியாக பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்கி இருந்தது.

இவ்வெற்றிக் கொண்டாட்டம் என்ற பேரில் தேசியப் பட்டியல் வழங்கப்பட்ட ஏனைய 6 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இல்லாத அக்கறை ஹிஸ்புல்லாஹ் தரப்புக்கு ஏற்பட்டது ஏன்?

அழுத்கமை எரிவதற்கு பொதுபலசேனாவின் ஊர்வலமே பிரதான காரணமாக அமைந்தது. தம்புள்ளைப் பள்ளி தாக்கப்படுவதற்கும் பேரினவாத ஊர்வலமே பிரதான காரணமாக அமைந்தது.

இதேபோன்றுதான் நேற்று காத்தான்குடியில் வெற்றிக் களிப்பு ஊர்வலம் என்றபேரில் அடிதடி ஊர்வலம் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

fireworks

அந்நிய சமூகம் எமது மக்களின் முகத்தில் உமிழும் அளவுக்கு காத்தான்குடியின் தனிக்காட்டு ராஜா அரசியல் கைக்கூலிகளின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.

ஹிஸ்புல்லாஹ்வுக்கு பாராளுமன்ற உறுப்புரிமை கிடைக்காவிட்டால், தங்களது பிழைப்பு கெட்டுவிடும் என்பதாலும், அதிக வருமானத்தை கறுப்புப் பணங்களாக பெற முடியாது என்ற நப்பாசையிலும் ஊரிப்போயிருக்கும் சிரேஷ்ட தோழர்களின் துல்லியமான வழிகாட்டலிலேயே இந்த அதிரடி ஊர்வலம் காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்டது.

இவ்ஆர்ப்பாட்டத்தில் தோழர்களும், அவர்களது உறவினர்களும் மற்றும் சிறுவர்களும் அதிகளவில் கலந்துகொண்டிருந்தது இதனைப் பறைசாற்றுகின்றது.
இச்சம்பவத்தை மறைப்பதற்கு ஹிஸ்புல்லாஹ் தரப்பு ஆதரவாளர்கள் அதிகப்பிரயத்தனம் எடுத்து வந்தபோதிலும், அவர்களது பேட்டிகளும், கருத்துக்களும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.

hizbullah victory celebration

உண்மையில் அல்லாஹ்விடம் பிராத்தித்து இந்த பாராளுமன்ற உறுப்புரிமை கிடைத்திருந்தால், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக இதன் மகிழ்ச்சி வெளிப்பாடு அமைந்திருக்கும். ஆனால் பின்கதவால் இப்பதவி பெறப்பட்டதால், அல்லாஹ்வின் நினைவு அங்கு மறக்கப்பட்டு, தனிநபர் அடிதடி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இச்சம்பவத்தில் தொடர்புபட்ட அனைவர்கள் மீதும் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரசியல் ஜால்ராவுக்கு அப்பால் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக இருக்கின்றனர்.

இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதற்கு முன்னர் நீதி மன்ற வாசல்களை பல தடவை சந்தித்தவர்கள் என்பது சிறப்பம்சம்.

Published by

Leave a comment