-
அபூ அல்தாப்
காத்தான்குடி: குறுக்கு வழியூடாக தேசியப்பட்டியல் பெற்றவர்கள் இன்று வன்முறைகளை கட்டவிழ்த்துள்ளதை கண்டிக்கின்றோம் இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த பொதுத் தேர்தலின்போது நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நாம் பல தியாகங்கள் அர்ப்பணிப்புகள் ஏன் உயிரைக் கூட பணயம் வைத்து தேர்தலில் போட்டியிட்டோம். குறுக்கு வழியூடாக தேசியப்பட்டடியல் பெற்ற முன்னாள் பிரதியமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா தனக்கு தேசியப்பட்டியல் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடியாட்களைக் கொண்டு அடாவடித்தனங்களை கட்டவிழ்த்துள்ளார்.
காத்தான்குடி, பாலமுனை, ரிதிதென்ன, காங்கேயனோடை போன்ற கிராமங்களுக்குள் சென்று மக்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர். நல்லாட்சியை விரும்பாதவர்கள் நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு தேசியப்பட்டியல வழங்கப்பட்டமையிட்டு மனவேதனையடைகின்றோம். எனவே அவருக்கு வழங்கப்பட்டதை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மீண்டும் வாபஸ் பெறவேண்டும்.
சிரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் மதஸ்தாபனங்கள் மற்றும் வரத்தக நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன.
பட்டாசுகளைக் கொழுத்தி வீடுகளுக்குள் போட்டு வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் இது தொடர்பாக பொலிசில் முறைப்பாடு செய்துள்ளோம் அவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்.

Leave a comment