எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கின்ற சமூக அபிவிருத்திப் பணிகளுக்கு ஆதரவை கோருகிறார் ஷிப்லி பாறூக்

  • எம்.ஐ.அப்துல் நஸார்

Shiblyகாத்தான்குடி: எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள சமூக அபிவிருத்திப் பணிகளுக்கு ஆதரவை வழங்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நன்றி நவிலல் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள பிசுரமொன்றிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த பொதுத் தேர்தலில் என்னை மதித்து எனக்காக நீங்கள் வாக்களித்ததன் மூலம் நமது கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸ் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓர் ஆசனத்தைப் பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸ் கட்சி பெற்றுக்கொண்ட 38,423 வாக்குகளில் நீங்கள் எனக்கு அளித்த 11,442 விருப்பு வாக்குகளின் மூலம் அவ் வெற்றியில் நாமும் பங்காளிகளாக ஆகியுள்ளோம்.

இதனடிப்படையில், எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கின்ற சமூக அபிவிருத்திப் பணிகளில் என்னாலான சேவைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க உங்களுடைய ஆதரவை நீங்கள் எனக்கு வழங்க வேண்டும் இதன் மூலம் எம் சமூகம் மேலும் முன்னேற உங்களுடைய பங்களிப்பை செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Published by

One response to “எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கின்ற சமூக அபிவிருத்திப் பணிகளுக்கு ஆதரவை கோருகிறார் ஷிப்லி பாறூக்”

  1. 21,000 preference rcvd from Hibullah.
    11,000 preference rcvd from CM,SLMC,PMGG
    KOOIDA KOOOOOOI. KOOOOOOIIIII….

Leave a reply to mohdrislan Cancel reply