“ஹிஸ்புல்லாஹ் தோல்வியைத் தழுவியுள்ளார்”

  • இனியவன்

hizbullahமட்டக்களப்பு: ஐ.ம.சு.கூ. யின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம வேட்பாளராகப் போட்டியிட்ட எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், 340 வாக்குகளால் தோல்வியைத் தழுவியுள்ளதாக ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் வாக்களிப்பு நிலையத்திலிருந்து அறிவித்துள்ளனர். இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும், ஐ.தே.க. ஒரு ஆசனத்தையும் பெற்றிருக்கின்றது.

அமீர் அலிக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்குமிடையிலான இறுதிவரையிலான போட்டியில் இந்த 340 வாக்குகள் வித்தியாசத்தில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தோல்வியைத் தழுவியதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வாக்குகள் மீண்டும் எண்ணப்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், இந்தத் தகவலிலும் குழப்பமிருப்பதாகவும், 2000 வாக்குகள் வித்தியாசத்தில் ஹிஸ்புல்லாஹ் தோல்வியைத் தழுவியிருப்பதாகவும் எதிர்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விபரங்கள் விரைவில்

Published by

2 responses to ““ஹிஸ்புல்லாஹ் தோல்வியைத் தழுவியுள்ளார்””

  1. Most Preference votes in Batticaloa District in Muslim candidates

  2. Hizbullah – 16,593
    Ameer Ali – 16,386
    Ali Zahir Moulana – 16,111
    Rahuman – 12,468
    Shibly – 11,442

Leave a reply to mohdrislan Cancel reply