காத்தான்குடி பிரதேசத்தில் சுமுகமான முறையில் தேர்தல் வாக்களிப்பு

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

Elections 2015காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான் தேர்தல் வாக்களிப்பு சுமுகமான முறையில் இடம்பெற்றது.

அத்தோடு ஆண்கள்,பெண்கள் ,வயோதிபர்கள் ,இளைஞர்கள் ,யுவதிகள்,விஷேட தேவையோடையோர் என பலரும் மிகவும் ஆர்வத்துடன் தேர்தல் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

Election 2015

தேர்தல் இடம்பெறும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அடிக்கடி தேர்தல் செயலக அதிகாரிகள் உட்பட தேர்தல் காண்காணிப்பாளர்கள் வருகை தந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதோடு தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் அமையப் பெற்றுள்ள பகுதிகளில் பொலிசாரும்,விஷேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Elections 2015

Published by

Leave a comment