- NFGG
காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்துள்ள “மாபெரும் மகளிர் மாநாடு” இன்று மாலை 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும்.
“அரசியலில் விழிப்புற்ற பெண்கள் சமூகம் ஒன்றை கட்டியெழுப்ப்புவதன் மூலம் கௌரவமான, நிம்மதியான, தரமான வாழ்வினை வென்றெடுப்போம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இம் மகளிர் மாநாட்டில் இலங்கையின் பிரபல பெண்கள் பலர் அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
போக்குவரத்து வசதிகள் மற்றும் அஸர் தொழுகைக்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்விற்கு மகளிர்கள் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிழக்குப் பிராந்திய மகளிர் அணி சார்பில் ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுக்கின்றது.

Leave a comment