வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற இன்னும் இருப்பது விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களே. தான் இந்த நாட்டை மன்னர் ஆட்சிபோன்று அசைக்கமுடியாத குடும்ப ஆட்சியாக தனது ஆட்சியை மாற்ற பல கோடிகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கி, 18வது திருத்தச்சட்டத்தை ஏற்படுத்தி வெற்றிபெற்ற மஹிந்த கூட்டணி, அல்லாஹ்வின் உதவியால் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி, தனக்கு மேல் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை மகிந்தவுக்கு பாடம் கற்பித்து அரசியல் சரித்திம் படைத்தனர் முஸ்லிம்கள்.
ஆனால் இன்று அற்ப அரசியல்வாதிகளின் பணத்தாசைக்கு சோரம் போய், மீண்டும் மஹிந்தவின் ஆட்சியை இந்த பூமியில் நிலைநிறுத்த இப்போது, ஒரு சில முஸ்லிம்கள் செயல்பட்டுவருவது வெட்கமளிக்கின்றது.
மஹிந்த கூட்டணி, முதன் முதலாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவைக் ‘கை’க்குள் போட்டுக்கொண்டதன் பின்னர், தம்புள்ளை பள்ளிவாயிலில் கைவைத்தது. அதன் பின்னர் ஹலால் அகற்றல் விடயத்தில் வெற்றி கண்டது. முஸ்லிம் பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டன. மத்ரஸாக்கள், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டன. பொது பல சேனா என்ற முஸ்லிம் விரோத அமைப்பு இந்த நாட்டில் அதி கூடிய பாதுகாப்புடன் வலம்வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பர்மாவின் ‘கசாப்புக்கடைக்காரன்’ அசின் விராதுவை இலங்கைக்கு அழைத்து, முஸ்லிம் எதிர்ப்பு மாநாடு நடாத்தப்பட்டது. அழுத்கமை, தர்ஹா டவுண் மற்றும் பேருவளை தாக்கப்பட்டது. எம் உறவுகள் கொல்லப்பட்டனர். சகோதரிகள் விதவையானார்கள். ரக்பி வீரர் வசீம் தாஜூன் உட்பட பலர் கொல்லப்பட்டனர். வெள்ளை வேன் ஆட்கடத்தல், கோட்டபாயவின் எவன் கார்ட் படையணி, கிறீஸ் மனிதன், மதுபான இறக்குமதி, களியாட்டம், சூது, விபச்சாரம், காணி அபகரிப்பு, மகிந்தவின் வீட்டுச் செலவு, வெளிநாட்டு ஆடம்பரப் பயணம், மகிந்தவின் புதல்வர்களுக்கு விலைமதிப்புள்ள ஆடம்பர கார்கள், குதிரைகள் இப்படி இந்த நாட்டை அழித்துக்கொண்டிருந்த இந்த கொடூர ஆட்சியுடன் தொடர்புபட்ட மகிந்த கூட்டணிக்கும், பொதுபல சேனாவுக்கும் கடந்த ஜனவரி எட்டாம் திகதியுடன் இந்நாட்டில் இருந்துவந்த எழுதப்படாத சட்டங்கள் முடக்கப்பட்டன.
இவ்வாறான மகிந்த கூட்டணியின் அராஜகங்களை இன்றைய தேர்தல் மேடைகளில் நினைவுகூறும்போது, பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு மகிந்தவின் பேரை உச்சரிக்கும்போது மூளை கொதிக்கிறது. தன்னைத் தூற்றினாலும், தனது தாயைத் தூற்றினாலும் பரவாயில்லை. இந்நேரத்தில் மகிந்தவை மாத்திரம் தூற்றாதீர்கள் என இவர்கள் பிச்சை கேட்கும் கேவலமான நிலை பெயர்தாங்கி முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் இன்று காணப்படுகிறது.
எனவே, கடந்த ஜனவரி 8ம் திகதி எவ்வாறு இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து மகிந்த கூட்டணியை ஆட்சி அதிகாரங்களிலிருந்து விரட்டியத்தோமோ, அதே போல் இன்ஸாஅல்லாஹ் எதிர்வரும் 17ம் திகதியும் மகிந்தவை மீண்டும் ஆட்சியேற பின்கதவால் உழைக்கும் மகிந்த ஆதரவு வேட்பாளர்களை துறத்தியடிக்க இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட்டு, கடந்த கால முஸ்லிம்களின் பாதிப்புக்களுக்கான பதிலடியாக இத்தேர்தலைப் பயன்படுத்துமாரும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
யுவர்காத்தான்குடிக்காக, அர்ஷாட் எம். அகமட்
கொழும்பு(வாசகர் ஆக்கம்)
Published by




Leave a comment