- NFGG
காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிழக்குப் பிராந்திய மகளிர் அணி ஏற்பாடு செய்திருந்த “மகளிர் மாநாடு” ஆயிரக்கணக்கான மகளிர் பங்குகொண்டு சிறப்பித்தனர். காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் ஆரம்பமான மேற்படி மகளிர் மாநாடு NFGGயின் கிழக்குப் பிராந்திய மகளிர் அணி உறுப்பினர் திருமதி அனீஸா பிர்தௌஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் அதிதியாக பெண்கள் மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி ரட்ணராஜா விஷேட உரையாற்றினார். அத்துடன் NFGGயின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் நளீமி, அதன் கொள்கை பரப்புச் செயலாளர் சிராஜ் மஷ்ஹூர் ஆகியோரும் உரையாற்றினார்கள்.
இதன்போது மகளிர் அணி உறுப்பினர்களின் விஷேட கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் “மாற்றத்துக்காய் ஒன்றினைவோம்” என்ற தலைப்பில் உணர்சிக் காவியம் ஒன்றும் இடம்பெற்றது.
Leave a reply to mohdrislan Cancel reply