வசீம் தாஜுதீன்

thajudeenகாக்கையை காக்கை,
யானையை யானை,
பூனையை பூனை,
எலியை எலி,
புலியை புலி,
நரியை நரி,
ஏன்
நாயை நாய்,
பேயை பேய் கொன்றிராத திருநாட்டில்
இவனை
அவன் கொன்றதின் கொடுமைகண்டு
குளமானது என் கண்கள்.
மொழியிழந்து
மூர்ச்சையான காற்றின் தலைதடவி
தாலாட்டுப்பாடும்
இந்த இரவின் நெஞ்சை
பிளக்கும் அந்த உயிரின்மொழி
மௌனமாய் நம் நெஞ்சில்
ப(வ)லியென உ(அ)றைகிறது !

– பிரகாசக்கவி

Published by

Leave a comment