“வெற்றிலைக்கு அளிக்கும் வாக்குகள் முஸ்லிம் விரோத செயல்களை பலப்படுத்தும்”

hafiz-nazeer1[1]வாழைச்சேனை: எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து மஹிந்தவை பிரதமராக்கும் அளவுக்கு தமிழ் மக்கள் அரசியல் ஞானம் இல்லாதவர்கள் அல்ல. தமிழ் மக்கள் ஒட்டுமொத்த வாக்கி னையும் தமிழ் தேசிய கூட்டமைப் புக்கு அளித்து நான்கு ஆசனங்களைப் பெற வழிவகுப்பர். அவ்வாறான தீர்மானத்தை எடுக்கும் போது முஸ்லிம் மக்களும் மு.காவுக்கு வாக்களிக்கும் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

வாழைச்சேனை வீ.சி. விளையாட்டு மைதானத்தில் (07) வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற ஸ்ரீலங்கா மு.கா.எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கை யிலேயே கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இந்த தேர்தலில் வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் வாக்குகளே. இதை தமிழ் மக்கள் புரியாதவர்களல்ல.

அந்த வகையில் தமிழ் மக்களின் எந்த வொரு வாக்கும் வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கப்படாது. ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ் §சிய கூட்டமைப்பிற்கே ஆணையினை வழங்கவுள்ளனர்.

இந்த வகையில் மட்டக்களப்பு வாழ் முஸ்லிம் மக்களும் தமது வாக்குகளை வெற்றிலைச் சின்னத்துக்கு வழங்க கூடாது. அவ்வாறு வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கப்படும் வாக்குகள் முஸ்லிம் விரோத செயலை அங்கீகரிப்பதற்கொத்தவை.

இந்த நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட முன்நூறுக்கு மேற்பட்ட கொடுமைகளுக்கு அங்கீகாரம் வழங்குவது போன்றதே வெற்றிலைக்கழிக்கும் வாக்குகளாகும். இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் நல்லுற வினைப் பலப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரம், தமிழ் தேசிய கூட்டமைப்பும் கருத் தொற்று மையுடன் அபிவிருத்தி திட்டங் களையும் இன நல்லிணக்க செயற்பாடுகளையும் முனனெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன என்றார்.

Published by

One response to ““வெற்றிலைக்கு அளிக்கும் வாக்குகள் முஸ்லிம் விரோத செயல்களை பலப்படுத்தும்””

  1. PGE RESULTS -2015 BATTICALOA DISTRICT
    TULF – 03
    UNP – 01
    UPFA – 01

Leave a comment