“வசீம் தாஜூதீனின் சடலம் சிதைவடையவில்லை”: சட்ட வைத்திய அதிகாரி தகவல்

thajudeenகொழும்பு: இன்று தோண்டியெடுக்கப்பட்ட ரக்பி வீரர் தாஜூதீனின் சடலம் முற்றாக சிதைவடையாத நிலையில் காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். வசீம் தாஜூதீன் மரணம் தொடர்பில் பலமான சந்தேகங்களை எழுப்பி, குறித்த மரணம் தொடர்பில் மீள் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதில் கடந்த ஜனவரி தொடக்கம் மீடியா லிங்க் அமைப்புடன் இணைந்து கொழும்பு நிவ்ஸ் டுடே நிறுவனம் மிகப்பெரிய ஊடக யுத்தம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை தாஜூதீனின் சடலம் மீள் பிரேத பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்பட்டதனை அடுத்து இச்செய்திச்சேவை சட்ட வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்திருந்தது.

இதன்போது சடலம் முற்றாக சிதைவடையாமல் இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

thajudeen
வசீம் தாஜூதீன்

சடலம் பொலித்தீன் ஒன்றினால் முற்றாக பொதியிடப்பட்டு, புதைக்கப்பட்டிருந்தது. சடலத்தை சுற்றியிருந்த பொலித்தீன் பழுதடையாமல் இருப்பதன் காரணமாக சடலமும் பழுதடையாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக தடயவியல் பரிசோதனைகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளுக்காக தாஜூதீனின் சடலம் தற்போது கொழும்பு சட்ட வைத்திய மருத்துவபீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment