ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரக் கூட்டம் நேற்று நூறாணியா வீதி, அலியார் பேக்கரி சந்தியில் இடம்பெற்றது.
இப்பிரச்சாரக் கூட்டம் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் நகரசபை உறுப்பினர் MHA. நஸீர் அவர்களின் தலைமையில் NFGGயின் பிராந்திய செயற்குழு உறுப்பினர் சகோ, பைசர் அமான் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.
இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் விஷேட உரையாற்றினார். அத்துடன் NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), SLMCயின் கொள்கை பரப்புச் செயலாளர் ULMN.முபீன் BA, சட்டத்தரணி அஸ்ஹர், குருநாகலில் இருந்து, முஹம்மத் றியாஸ், உள்ளிட்ட பலரும் உரையாற்றினார்கள்.
NFGGயின் தலைமைத்துவசபை உறுப்பினர்களான பொறியியலாளர் பழுலுல் ஹக், அஷ்ஷெய்க் ALM.சபீல் (நளீமி) மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினர் AGM.ஹாறூன் மற்றும் SLMCயின் மத்தியகுழு உறுப்பினர்களான மர்சூக் அஹமது லெப்பை, இல்மி அஹமது லெப்பை உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் அதிகளவான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இதேவேளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏறாவூரில் ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரக் கூட்டம் நேற்று ஓடாவியார் வீதி, றிபாய் பள்ளிவாயலின் அருகாமையில் இடம்பெற்றது.
Published by

Leave a comment