வெள்ள நிலைமையைக் கையாள சர்வதேசத்தின் உதவியைக் கோருகிறது மியன்மார்

myanmar floodஎம்.ஐ.அப்துல் நஸார்

நெய்பிடாவ்: பாரிய வெள்ளப் பெருக்கை சந்தித்துள்ள மியன்மார் தொடர்பற்றுப் போயிருக்கும் பிராந்தியங்களில் உள்ளோரை மீட்பதற்கு போராடிவரும் நிலையில் வெள்ள நிலைமையைக் கையாள்வதற்கு சர்வதேசத்தின் உதவியை கடந்த செவ்வாய்கிழமை உத்தியோகபூர்வமாகக் கோரியுள்ளது.

வெள்ளப்பெருக்கு மற்றும் மணசரிவு காரணமாக இதுவரை 46 போர் உயிரிழந்துள்ளதோடு சுமார் 515,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளப் பெருக்கினை ‘பாரிய இயற்கை அனர்த்தம்’ என ஐக்கிய நாடுகள் சபை விபரித்துள்ளது.

ஆறுகள் பெருக்கடுப்பதன் காரணமாக நாட்டின் வடக்குப் பகுதியிலுள்ள தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்திருக்கும் நிலையில் இலட்சக் கணக்கானோர் தொடர்பற்று காணப்படுகின்றனர்.

myanmar flood

‘மியன்மார் அதிகாரிகள் இன்று முறையாக சர்வதேசத்தின் உதவியை நாடியுள்ளனர்’ என மனிதாபிமான விவகாரங்களைக் இணைப்புச் செய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய உதவி வழங்கும் முகவர் நிறுவனங்களும கடந்த ஜூலை மாதம் தொடக்கம்; நிவாரணப் பணிகளில் பங்கெடுத்து வருவதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவ ஜூண்டா ஆட்சியின் கீழ் நினைத்துப் பார்க்காத அளவு வெளிநாட்டு உதவிகளை அனுமதிப்பதற்கு மியன்மார் இணக்கம் தெரிவித்ததனால், இராணுவ உலங்கு வானூர்திகளும் வர்த்தக விமானங்களும் சர்வதேச உணவு உதவியினை கொண்டு சேர்ப்பதற்கு உதவியுள்ளன.

2008ஆம் ஆண்டு இராவெட்டி டெல்டா பிரதேசத்தை துவம்சம் செய்த நர்ஜிஸ் சூறாவளி காரணமான சுமார் 140,000 பேர் உயிரிழந்து அல்லது காணாமல் போயிருந்த நிலையில் பல வாரங்களாக சர்வதேச உதவியை மறுத்து வந்ததால் இராணுவ ஆட்சி பரவலாக விமர்சனத்திற்குள்ளானது.

சமூக ஊடகப் பாவனையாளர்களின் தொகை அதிகரிப்பு பகுதிச் சிவிலியன் அரசாங்கம் வெள்ள அனர்த்தம் தொடர்பில் எடுத்த நடவடிக்கை தொடர்பில் அனர்த்தத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளதாக ஏலவே கண்டனங்களுக்கு இலக்காகியுள்ளது.

உள்நாட்டில் அனர்த்த நிலையில் இருந்து மீள்வதற்கு பாரிய பிரச்சினைகள் நிலவும் நிலையில் மியன்மார் தேவைப்பாடுகள் தொடர்பான உத்தியோகபூர்வ பட்டியலொன்றை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்துள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் யே டட் ஏ.எப்.பி. செய்தித் தாபனத்திடம் தெரிவித்தார்.

நாம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினோம். ஆனால் சில பிரதேசங்களிலிருந்து மக்களை மீட்பதற்கு வள்ளங்கள் போன்ற வளங்கள் எம்மிடம் இருக்கவில்லை. கடந்த 100 ஆண்டுகளில் இடம்பெற்ற மிக மோசமான அனர்த்தத்தினை நாட்டின் வடக்குப் பகுதியின் சகாயிங் பிராந்தியத்தில் காணலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

Published by

Leave a comment